பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 சத்திய வெள்ளம்

விஷயம் ஞாபகம் இருக்கட்டும். அடகுக் கடைக்குத் தனியே போகாதீர்கள். போன மாதம் இங்கே ஆண்டாள் விடுதியில் தங்கியிருக்கும் என் சிநேகிதி ஒருத்தி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தன் காதலன் ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட நகைகளை உதவியிருக்கிறாள். அவன் தனியாக அடகுக் கடைக்குப் போக, ஒரு மாணவனுக்குப் பெண் களின் நகை ஏது? என்ற சந்தேகத்தோடு அடகுக் கடை சேட் போலீசுக்குப் ஃபோன் செய்து கேலிக் கூத்தாகி அப்புறம் அவளே நேரில் போய் உதவவேண்டியதாகி விட்டது. போகும்போது சொல்லுங்கள். நானும்கூட வருகிறேன்” என்றாள் கண்ணுக்கினியாள். காலை பதினொருமணிக்கு அண்ணாச்சிக் கடைக்கு அவளை வரச் சொன்னான் பாண்டியன். அவள் விடை பெற்றுக் கொண்டு சென்றாள். அவள் நடந்து செல்லும் அழகைச் சிறிது நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் அவன். பின்னால் யாரோ வருகிற காலடி ஓசை கேட்கவே திரும்பியவன் பூதலிங்கம் சார் பணியனும் துண்டுமாகக் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பது தெரிந்ததும் கையி லிருந்த வளைகளையும் செயினையும், மோதிரத்தையும் பேண்ட் பாக்கெட்டில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு நிமிர்ந்து அவரை வணங்கினான்.

“பாண்டியன்! அப்புறம் மறந்துவிடாமல் என்னை வீட்டில் வந்து பார்! ஜூவாலஜி புரொபஸர் தங்கராஜு உங்கள் மகாநாட்டு நிதிக்காக என்னிடம் நூறு ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். லோஷியாலஜி வீரராகவன் ஒரு ஐம்பது ரூபாய் தந்திருக்கிறார். அதையெல்லாம் வாங்கிக் கொண்டு போ. இன்னும் சிலரிடம் சொல்லி யிருக்கிறேன். ஏதாவது கிடைக்கலாம். பாவம். உங்களுக்கு எல்லாம் ரொம்பச் சிரமமாயிருக்கும். பந்தல் தீப்பிடித்திரா விட்டால் இத்தனை பணத்தட்டுப்பாடு வந்திருக்காது.” என்றார் அவர். தங்களுக்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையைப் பாராட்டி நன்றி சொன்னான் பாண்டியன். அவர்கள் கோயிலிலிருந்து திரும்பும்போது விடுதிக்கும் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கும் வழி பிரிகிற இடத்தில்