பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 421

அவன் விடைபெறும்போது, “பாண்டியன்! நான் சொல் வது நமக்குள் இருக்கட்டும். கீப் இட் இன் யுவர் மைண்ட் அண்ட் பீ கேர்ஃபுல்! வி.ஸி. பொங்கல் முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததுமே ஒரு வாரத்துக்குள் அநேகமாகக் கான்வ கேஷனை நடத்தி விடுவார் என்று தெரிகிறது. கான்வ கேஷனுக்குள் எதையாவது குற்றம்சாட்டி உன்னையும் வேறு சில ஆக்டிவ்-ஸ்டுடன்ஸையும் பல்கலைக் கழகத்தி லிருந்து சஸ்பெண்ட் செய்துவிடக்கூட வி.ஸி. தயாராயி ருப்பார். இது யூனிவர்ஸிடிக்குள்ளே உள்ள விரோதம். யூனிவர்ஸிடிக்கு வெளியிலேயே இராவணசாமியின் ஆட்கள் அண்ணாச்சியின்மேல் கடுங்கோபத்தோடு கறுவிக் கொண்டிருக்கிறார்கள், ஜாக்கிரதை. டோண்ட் அண்டர் எஸ்டிமேட், எனிதிங்..” என்று பாசத்தோடு எச்சரித்தார். தம்மைப் பற்றியும் அவர் பாண்டியனிடம் கூறினார்.

“என் மேல்கூட விசிக்கு ஒரு கண் இருக்கிறது அப்பா! நான் மாணவர்களுக்கு வேண்டியவனாக இருப்பதும் தன்மான உணர்வுள்ள பல லெக்சரர்கள்ையும், பேராசிரியர்களையும் வி.சி.க்கு எதிரான அணியில் திரட்டியிருப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை. கதிரேசன் விவகாரத்தில் அநாவசியமாக என் வீட்டில் போலீஸ் ரெய்ட் நடத்தத் துண்டியது விசிதான். இதற்கெல்லாம் . நான் பயந்து ஒடுங்கிவிடமாட்டேன். என்னால் அடிமையாக இருக்க முடியாது. பாவங்களில் எல்லாம் மிகப் பெரிய பாவம் படித்தவர்களின் அடிமைப் புத்திதான். படித்தவர்களே அடிமைப்படுகிற தேசத்தின் தலைவிதி யைக் கடவுள்கூட நேராக்க முடியாது. இந்த வேலையை உதறிவிட்டு லேக் அவென்யூவில் ‘பூதலிங்கம் டுட்டோரியல் காலேஜ்’ என்று ஒரு போர்டு மாட்டிக் கொண்டு உட்கார்ந் தேன் என்றால் என் குடும்பத்தை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும். அப்படி ஒரு நாள் வரத்தான் போகிறது. அறிவுள்ளவர்களிடம் பணிவாக நடப்பதுவேறு. புத்தி யில்லாதவர்களிடம் அடிமைகளாக இருப்பது வேறு. இந்தப் பல்கலைக் கழக நிர்வாகத்தை இன்று வி.ஸி. நடத்த வில்லை. மறைமுகமாக இராவணசாமியும், கோட்டச் செயலாளர் குருசாமியும், அமைச்சருக்கு டாக்டர் பட்டம்