பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 423

அவன் இல்லாதபோது கதவு இடுக்கு வழியாக மல்லை இராவணசாமியின் கட்சியினர் போட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரம் கிடந்தது. அதில் பாண்டியனையும், அண்ணாச்சி யையும் ‘சாதிப்பித்துப் பிடித்தவர்கள் என்று வர்ணித் திருந்தார்கள் அவர்கள். சாதிகளை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டே மல்லை இராவணசாமியின் கட்சியினர் புதிய புதிய சாதிகளை உண்டாக்கியிருக்கிறார்கள். இந்த நாட்டில் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மேற்போக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தங்கள் சாதிகளைத் தவிர மற்ற எல்லாச் சாதிகளையும் ஒழிக்கவே அப்படிப் போராடுவது போல் தெரிகிறது. சாதி பேதங்களை ஒழிப்பது வேறு. சாதிகளை ஒழிப்பது வேறு. இங்கே ப்ேதங்களை அழிப்பதற்குப் பதில் மனிதர்களையே அழிக்க முயல்கிறார்கள் என்று மணவாளன் ஒருமுறை சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்தான் பாண்டியன். சாதி பேதங்களை ஒழிக்கும் இயக்கங்கள் சிலவற்றின் பக்குவ மில்லாத பிரசாரகர்கள் அவற்றை ஒழிக்கும் முயற்சிகளின் மூலமாகவே அவற்றை நன்றாக ஞாபகப்படுத்தியும், வற்புறுத்தியும் வளர்த்தும் விடுகிறார்கள். பிரசாரங்கள் என்பவை இருமுனையும் கூரான அரிவாள் போன்றவை. அவற்றை அளவாகப் பயன்படுத்தாவிட்டால் அவை அழிக்க வேண்டியவற்றை விட்டுவிட்டு வளர்க்க வேண்டி யதை அழித்து விடவும் கூடும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளை அவருடைய சாதியை இணைத்துப் புகழவும் பழிக்கவும் தொடங்குவதுகூட ஒருவகையில் பேதங்களை வளர்க்கவே உதவும் என்பது புரியாமல் தன்னையும், அண்ணாச்சியையும் மணவாளனையும் தாங்கள் ஒரு மாணவர் மகாநாட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டதைப் பார்த்து அடைந்த வயிற்றெரிச்சலுடன் இராவணசாமி கட்சியினர் பழிசுற முற்படுவது பாண்டியன் மனத்தை மிகவும் வருத்தியது. ஆனால் அந்தப் பொய்ப் பிரசாரத்தில் அவன் அயர்ந்து விடவோ, தளர்ந்து விடவோ இல்லை. நவீனகாலத்தில் சாதிபேதங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால்தான் வருகின்றன என்பதை அவன் உணர்ந் திருந்தான். சிறுபான்மை வகுப்பார் எதைப் பற்றிப் பேச