பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 429

“தலைமுறை தலைமுறையாகப் பல்கலைக் கழக செனட் சிண்டிகேட் உறுப்பினர் ஆவதற்கென்றே விரல் விட்டு எண்ணக் கூடிய சில குடும்பங்கள் இங்கே இருக் கின்றன. புதிய சக்திகள் - நல்ல சக்திகள் பல்கலைக் கழகங்களில் நுழைந்து விடாமல் கவனித்துக் கொள் கிறார்கள் இவர்கள்! ஆனந்தவேலுவை மதித்து வரச் சொல்லி அண்ணன் இங்கே கூப்பிட்டிருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை.”

“நீ கூறும் குறைபாடுகள் ஜனநாயகத்தைப் போற்றவும், நேசிக்கவும், தெரியாதவர்களிடம் ஜனநாயகம் சிக்கிக் கொண்டால் அது என்னென்ன புண்களையும், காயங் களையும்பட வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது பாண்டியன்! அதே தவற்றை நானும் நீயும் செய்யக் கூடாது. ஆனந்தவேலு என்னை எதற்காகப் பார்க்க வரப் போகிறார் என்று தெரியாமலே நான் அவரைக் காண மறுப்பது சரியில்லை. அவரைப் பார்க்க வரச் சொல்வ தனாலேயே நான் கெட்டுவிட முடியுமானால் என் கொள்கைகளின் உறுதியையே நீ சந்தேகிக்கிறாய் என்று ஆகிறது” என்று மணவாளன் பதில் கூறியபின்பே பாண்டி யன் அமைதி அடைந்தான். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே ஹோட்டல் மாடி வராந்தாவி லிருந்து ஆனந்தவேலுவின் ‘சவர்லே-இம்பாலா கீழே பிரதான வாயிற் காம்பவுண்டுக்குள் நுழைந்து வருவது தெரிந்தது அவர்களுக்கு. - -

வழக்கத்தைவிட மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் ஒரு பணிவான பெரியமனிதரைப் போல் முகம் மலரக் கை கூப்பிக் கொண்டே வந்தார் ஆனந்தவேலு. பாண்டி யனை அவர் கண்டு கொள்ளாதது போல் இருக்கவே மணவாளனே அவனை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பாண்டியன் அங்கிருந்து வெளியேறினாலொழியத் தாம் பேச வந்த விஷயத்தைப் பேச முடியாது என்பது போல் ஆனந்தவேலு குளிரின் கடுமை, வியாட்நாம் யுத்தம் என்று ஏதேதோ விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தார்.