பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 சத்திய வெள்ளம்

அங்கிருந்து தானாகவே எழுந்து இரண்டு முறை வெளியே வராந்தாவின் பக்கமாகப் போய் நிற்க முயன்ற பாண்டியனை, “இரு பாண்டியன். அப்புறம் போகலாம். இப்போதென்ன அவசரம்?” என்று மணவாளனே தடுத்து விட்டார். பாண்டியனும் அவர் குறிப்பை ஏற்று அங்கேயே இருந்து விட்டான். “பாவம்! அவரை ஏன் தடுக்கிறீர்கள்? இந்தக் காலத்தில் படிக்கிற பிள்ளைகளை ஓர் இடத்தில் கால் தரித்து உட்கார வைப்பது முடிகிற காரியம் இல்லை” என்று அங்கிருந்து பாண்டியனைப் போகச் செய்ய முயல்கிற தொனியில் குறுக்கிட்டுப் பேசினார், ஆனந்த வேலு. பாண்டியன், மணவாளன் இருவருமே விழிப்பா யிருந்து அவர் வார்த்தைகளைக் கவனித்தார்கள். சுற்றி வளைத்து வந்த காரியத்தை ஆரம்பித்தார் ஆனந்தவேலு. பசுத்தோல் விலகிப் புலி தெரியத் தொடங்கியது.

அங்கே மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்கு நெருப் பூட்டப் பட்டதனால் விளைந்த நஷ்டங்களுக்காக ஆனந்த வேலு வருத்தப்பட்டார். தம்முடைய நன்கொடையாக ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்டு அதைத் தருவதாக வாக்களித்தார். -

உடனே மணவாளன் குறுக்கிட்டு, “உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்? எங்களுக்குப் பணக் கஷ்டம் ஏற்பட்டது உண்மை. ஆனால் அதிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டோம். இப்போது எங்களுக்கு ஏதுவும் தேவையில்லை. உங்கள் அன்புக்கு நன்றி” என்று நாகுக்காக அவர் உதவியை மறுத்துவிட்டார். மாணவர்களுக்கு எப்போது எதற்காகப் பணமுடை வந்தாலும் தாம் உதவுவதற்குத் தயாராக இருப் பதாக மீண்டும் ஆனந்தவேலு கூறியபோது, “உங்களிடம் வந்து உங்களைச் சிரமப்படுத்துகிற அளவு பெரிய பணக் கஷ்டம் எங்களுக்கு எதுவும் வராது சார்!’ என்றார் LüᎶüᏈialiTöröᎢ .

“யூனிவர்ஸிடி திறந்ததும் கான்வகேஷன் வருகிறது. அதில் அமைச்சர் கரியமாணிக்கம் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். மாணவர்கள் கட்டுப்பாடாக நடந்து கொண்டு நம்முடைய யூனிவர்ஸிடியின் நற்பெயரைக்