பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 சத்திய வெள்ளம்

கூடாதே என்ற நல்லெண்ணத்தில்தான் இங்கு வந்தேன் நான்.” -

“உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி! நீங்கள் சாம, தான, பேத தண்ட முறைகளால் எங்களை மிரட்டு கிறீர்கள். இந்த நூற்றாண்டில் மிரட்டல்கள்கூட மிகவும் நாசூக்காக நடக்கின்றன. இனிய வார்த்தைகளைப் பயங் கரமான அர்த்தத்தில் கூறும் மிரட்டல்களை விடப் பயங் கரமான வார்த்தைகளைப் பகிரங்கமாகவே கூறிக்கொண்டு கழியும் கையுமாக எதிரே வருகிற மிரட்டலே பரவா யில்லை. ஏனெனில் அதில் ஒளிவு மறைவில்லை” என்று அவரைச் சாடினார் மணவாளன்.

“எனிஹெள. ப்ளீஸ் திங்க் ஒவர் இட் எகெய்ன். அண்ட் டெல் மீ. ஃபார்சுனேட்லி யூ ஹாவ் எனஃப் டைம் டு திங்க்...” என்று கூறிக் கொண்டே போவதற்கு எழுந்து நின்ற ஆனந்தவேலுவை நோக்கிப் பெரிய கும்பிடாகப் போட்டு அனுப்பிவைத்தார்கள் மணவாளனும், பாண்டி யனும். அவர் எதற்காகத் தேடி வந்துவிட்டுப் போனார் என்பது இவ் இருவருக்குமே தெளிவாகப் புரிந்துவிட்டது. மணவாளன் கேலியாகச் சிரித்தபடியே பாண்டியனிடம் கூறினார்:. - -

“ஸோ. பட்டமளிப்பு விழாவைப் பொங்கல் விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததுமே நடத்தப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.”

“ஆமாம்! இனிமேல் தள்ளிப் போடமாட்டார்கள். நமது மகாநாட்டில் பேச வந்தால் அரசாங்கத்தில் கெட்ட பேர் வாங்க நேரிடுமோ என்று பயப்பட்ட வி.சி. நேற்று மாலை மல்லை இராவணசாமியைப் பதிப்பாளராகவும் கோட்டம் குருசாமியை ஆசிரியராகவும் கொண்ட ‘தீவட்டி என்ற வார இதழை வெளியிட்டுப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தீவட்டி'யால்தான் தமிழகம் ஒளிபெற முடியும் என்று கூடத் திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறார்.” “அதுமட்டுமில்லை, பாண்டியன்! இலக்கிய விழாக் களுக்கு அழைத்தால்கூட எனக்கு ஒய்வில்லை; என் அமைதியில் குறுக்கிடாதீர். மன்னிக்கவும் என்று