பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 435

களும் பட்டமளிப்பு விழாப் போராட்டத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். பொங்கல் விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததும் தானே மீண்டும் வருவதாகக் கூறி விடை பெற்றார் மணவளான். பாண்டி யனும் நண்பர்களிடம் அதையே கூறினான்.

அன்றிரவு மதுரையில் மணவாளனோடு தங்கிவிட்டு மறுநாள் பகலில் பாலவநத்தம் போக முடிவு செய்திருந் தான் பாண்டியன். மறுநாள் காலை அவன் சித்திரக்காரத் தெருவுக்குப் போய்க் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அவன் போனபோது கந்தசாமி நாயுடு, அவர் மனைவி, மகள் கண்ணுக்கினியாள் எல்லோருமாகச் செவ்விள நீர்க் கொத்து, பூக்குடலை, தேங்காய் பழம் சகிதம் வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தார்கள். வாசலில் ஒரு டாக்ஸி தயாராக நின்று கொண்டிருந்தது.

“நீயும் வாயேன், தம்பீ! வண்டியூர்த் தெப்பக்குளம் வரையில் போயிட்டு வரலாம், ஒரு பிரார்த்தனை இருக்கு. பகல் சாப்பாட்டுக்கு இங்கே திரும்பிவிடலாம்.” என்றார் நாயுடு. “மறுத்துவிடாமல் வாருங்கள்” என்று கண் பார்வை யாலேயே அவனைக் கெஞ்சினாள் கண்ணுக்கினியாள். அவன் பகல் உணவுக்குள் மணவாளன் வீட்டுக்குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனாலும் நாயுடுவின் வேண்டுகோளையும், கண்ணுக்கினியாளின் ஆசையையும் தட்ட முடியாமல் அவன் அவர்களோடு செல்லும்படி ஆகிவிட்டது. போகும்போது அவன் கண்ணுக் கினியாளிடம் தனியாக எதுவும் பேச முடியவில்லை. நாயுடுதான் அண்ணாச்சியின் செளக்கியம் பற்றியும் மகாநாட்டுப் பந்தலில் தீப்பிடித்தது பற்றியும் கேள்விமேல் கேள்வியாக இரண்டொரு கேள்விகளைக் கேட்டாள். மாரியம்மன் தெப்பக்குளம் போய்ச் சேர்ந்ததும் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாயுடுவிடம் சொல்லிக் கொண்டு படகில் தெப்பக்குளத்தின் மையமண்ட பத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள் அவர்கள். அவள் கைகளை இன்னும் அதே சாதாரண வளைகள் மட்டும்