பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 சத்திய வெள்ளம்

அலங்கரிப்பதைப் பார்த்த அவன், “நாயினாவோ, அம்மாவோ ஒண்னும் கேட்கலியா?” என்றான். படகில் பலரும் இருந்ததால் அவர்கள் தங்களையே கூர்ந்து கவனித்து விடாத வகையில் பொதுவாகப் பேசிக் கொண் டார்கள் அவர்கள். அவள் பதில் சொன்னாள்; “கேட்டாங்க திருடு போயிடிச்சுன்னு பொய் சொன்னேன். பொய் என்ன? நெஜமும் அதுதானே?. வளை, மோதிரம், செயின் எல்லாத்தையும் திருடி, மனசையும் திருடி..?” அவன் அவளை முறைத்துப் பார்த்தான். “வளை, மோதிரம், செயின் எல்லாத்தையும் வேணாத் திருப்பித் தந்திடலாம். ஆனால் நீ கடைசியாச் சொன்னதை மட்டும் திருப்பித் தர முடியாது.”

“பட்டமளிப்பு விழா என்ன ஆச்சு? எப்ப நடக்கும்? மாணவர்கள் என்ன செய்யிறதா முடிவு பண்ணினிங்க?...” என்று மெல்லப் பேச்சை மாற்றினாள் அவள். அந்த விவரங்களையெல்லாம் அவளிடம் சொன்னான் அவன். மைய மண்டபத்தின் நடுவில் இருந்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்கள் அவர்கள். ஒரிடத்தில் படியில் விழுந்து விடுவதுபோல் தள்ளாடிய அவளைத் தன் கை களால் தழுவினாற்போல் தாங்கிக் கொண்டான் அவன். “விடுங்க. இதென்ன. விளையாட்டு...?” என்று செல்ல மாகச் சிணுங்கிய அவளை, “அது என்ன விளையாட்டு என்று பரீட்சைக் கேள்வி மாதிரிக் கேட்டால் எப்படிப் பதில் சொல்ல முடியும்? இதுதான் விளையாட்டு! விளை யாட வேண்டிய விளையாட்டு” என்று பதில் சொல்லிய படியே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் அவன். கீழேயிருந்த படிகளில் மேலும் சிலர் ஏறி வரும் ஒசை கேட்கவே அவள் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு, “வருபவர்கள் வாழ்க!” என்றாள். “அவர்கள் வீழ்க” என்றான் அவன். தங்கள் தனிமையைக் கெடுத்த அவர்கள் மேல் கோபம் வந்தது அவனுக்கு. மைய மண்டபக் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தபோது மேற்கே கோபுரங்களும், மதுரை நகரமும், திருப்பரங் குன்றமும் மிக மிக அழகாகத் தெரிந்தன.