பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 சத்திய வெள்ளம்

அதில் கலந்துக்கிடணும்” என்று வேண்டினார் அவர்களில் ஒர் இளைஞர். “தமிழ் வளர்த்த வள்ளல்கள்” என்பது கவியரங்கத்தின் தலைப்பு. நீங்க யாரைப் பற்றிப் பாடப் போlங்க?” என்று அவர்கள் கேட்டபோது, “நான் பாண்டித்துரைத் தேவரைப் பற்றிப் பாடறேன்” என்றான் பாண்டியன்.

“இல்லே! நாங்க எல்லோரும் இந்தக் காலத்துப் பிரமுகர்களைப் பற்றித்தான் பாடப்போறோம். நீங்களும் இந்தக் காலத்துப் பிரமுகர் யாரையாவது பற்றிப் பாடுங் களேன்” என்று கேட்டார் அந்த இளைஞர்களில் ஒருவர். “நீங்க தமிழை வளர்த்தவங்களைப் பற்றித்தான் கவியரங்கம்னு சொன்னிங்க. அதனாலேதான் நான் பாண்டித்துரைத் தேவரைப் பற்றிப் பாடறேன்னு சொன்னேன். நீங்கள் தமிழாலே வளர்ந்த வங்கன்னு தலைப்பை மற்றிக் கொண்டால் நான் இந்தக் காலத்திலே இருக்கிற யாரைப் பற்றியும் பாடலாம்” என்று உடனே அந்த இளைஞருக்கு மறுமொழி கூறினான் பாண்டியன். இதைக் கேட்டு அந்த இளைஞர்களில் பலர் சிரித்து விட்டார்கள். அவர்கள் பேசி விட்டுப் போன பின் பக்கத்து வீட்டுச் சன்னாசித் தேவர் அவனைக் கூப்பிட்டுத் தம் அருகே உட்காரச் சொன்னார். அப்படி அவர் கூப்பிட்டபோது பாண்டியனின் தந்தை திண்ணை யிலிருந்து உள்வீட்டுப் பக்கமாக எழுந்து போயிருந்தார். “தம்பீ! நாளன்னைக்கு நம்ம தலைவரு ஒருத்தர் இங்கே வரப் போறாரு அவர் உன்னையும் சந்திச்சுப் பேசனும், பகல்லே எங்கேயும் போயிட மாட்டியில்ல. வீட்டிலே தானே இருப்பே?” என்று கேட்டார் சன்னாசித் தேவர். பாண்டியன் பதில் சொல்லத் தயங்கினான். சன்னாசித் தேவரின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை அவனால் உடனடியாக அநுமானம் பண்ணிவிட முடியாமலிருந்தது. சிறிது விழிப்பு உணர்ச்சியடைந்த மனநிலையுடன், “யாரு வாராங்க? நான் ஏன் அவரைப் பார்க்கணும்னு முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லது” என்று சன்னாசித் தேவரைக் கேட்டான்