பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 451

பிடிக்க முடியாமலிருந்தது. கூட்டத்தை அப்படி வன்முறை யில் ஈடுபடத் துாண்டும் அளவுக்குப் போலீஸார் எல்லை மீறிக் கொடுமை செய்து விட்டார்கள் என்பதுதான் காரணம் என்றாலும் அந்த பஸ் தீப்பிடித்து எரிவதைக் கண்டு மணவாளன் மனப்பூர்வமாக வருந்தினார். ஒரு வேளை அநாவசியமான தங்கள் தடியடிப் பிரயோகத்தை யும் கண்ணிர்ப்புகைப் பிரயோகத்தையும் நியாயப்படுத்து வதற்காகப் போலீஸாரே பஸ்ஸுக்கு நெருப்பு மூட்டியிருக் கலாமோ என்றுகூட அவருக்குத் தோன்றியது அப்போது. இப்படி மணவாளனும், தொழிலாளர் யூனியன் செயலாளரும் நடந்துவிட்ட நிகழ்ச்சிகளுக்காக வருந்திய படி அண்ணாச்சிக் கடை முகப்பில் நின்று கொண்டிருந்த போது முற்றிலும் எதிர்பாராதவிதமாக ஒர் இன்ஸ்பெக் டரும் கான்ஸ்டேபிளுமாக வந்து பஸ்ஸுக்கு நெருப்பு மூட்ட தூண்டிய குற்றத்துக்காக அவர்கள் இருவரையும் அரெஸ்ட் செய்வதாகச் சொல்லி கைது செய்தார். மக்களை அமைதியாகக் கலைந்து போகுமாறு வேண்டிக் கொண்ட தைத் தவிரக் கடை வாயிலிலிருந்து தாங்கள் நகரக்கூட இல்லை என்று அவர்கள் கூறிய விளக்கத்தைப் போலீசார் கேட்டுக் கொள்ளக்கூடத் தயாராக இல்லை. கைதாகிப் போலீஸ் வேனில் ஏறுமுன், “பட்டமளிப்பு விழா வருவதற் குள் அநேகமாக எல்லாரையுமே இப்படி உள்ளே தள்ளி விடுவதுதான் அவர்கள் நோக்கம்! பிரிட்டீஷ் ஆட்சியில் கூட இவ்வளவு எதேச்சாதிகாரம் இருந்திராது” என்றார் யூனியன் செயலாளர். “மக்களின் உரிமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். பரிந்துணர்வும் புரிந்துணர்வும் உள்ளவர்களின் சர்வாதி காரத்தையாவது எதிர்த்துப் போரிடலாம். முரட்டுச் சர்வாதிகாரத்தில் எதிர்ப்பதற்கும் போரிடுவதற்கும்கூட முடியாமற் போய்விடும் அப்படி ஒரு சர்வாதிகாரத்தின் கீழேதான் நாம் இன்று இருக்கிறோம்” என்றார் மண வாளன். பகல் உணவு நேரத்துக்குள் அவர்கள் இருவரும் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப்பட்டுவிட்டார்கள்.

大 ★ ★