பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 453

“அதுதான் அவங்க குணம்: மலிவான விலைக்குத் தங்களை விற்று விற்றுப் பழகியவர்கள் பல வேளைகளில் பிறரையும் அப்படி மலிவான விலைகளில் வாங்க முயல் வதுதான் இயல்பு. உன்னதமான மனித குணங்களையும் ரூபாய் அனாக் கணக்கில் பேச அவர்கள் கூசமாட்டார் கள். அவர்கள் அறிந்த கணக்கு அது ஒன்று மட்டும்தான்.”

“அவர்களுக்கு இல்லாமற் போய்விட்ட கூச்சம் மற்றவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் எப்படி நினைக்க முடியும்? வெட்கமாக இராதோ?”

“வெட்கமின்றி நினைத்துத்தானே இவ்வளவும் செய்கிறார்கள்? கூச்சம் இருந்தால் இதெல்லாம் செய் வார்களா ?”

நடுவில் நின்ற ஒரு பெரிய ஊரின் பஸ் நிலையத்தில் அவர்கள் கீழே இறங்கிச் சிற்றுண்டி காப்பி அருந் தினார்கள். பஸ் நிலக்கோட்டையைக் கடந்தபோது கதிரேசன், பிச்சைமுத்துவைப் பற்றி அவனிடம் நினை வூட்டிப் பேசினாள் அவன்.

“இதே கொடுமை நீடித்தால் நான்கூட ஒருநாள் கதிரேசன் ஆக வேண்டியிருக்கலாம். ஒரு படுமோசமான சர்வாதிகாரம் அதைவிடப் படுமோசமான பல விளைவு களை உண்டாக்கிவிடும். அன்பினாலே காரியங்களைச் சாதிக்க முயல்கிறவர்கள் தோற்கத் தோற்க ஆத்திரத்தோடு காரியங்களைச் சாதிக்கிற வீரர்கள்தான் உருவாக முடியும். நமது நியாயங்களும், நீதிகளும் அறவே புறக்கணிக்கப் படும்போது நாம் பலாத்காரங்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விடுகிறோம்.”

“போதும்! விளையாட்டுக்காகக்கூட இப்படிப் பேசாதீர்கள்” என்று தன் பூப்போன்ற வலது கரத்தினால் அவன் வாயைப் பொத்தினாள் அவள். அண்ணாச்சியைக் கைது செய்திருப்பதால் பாண்டியனின் உள்ளம் எவ்வளவுக்குக் குமுறிப் போயிருக்கிறது என்பதை அவள் அவன் பேச்சுக்களிலிருந்து அப்ப்ோது புரிந்துகொள்ள முடிந்தது. .