பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சத்திய வெள்ளம் என்று பாரதியார் நமக்காகத்தான் சொல்லி வைத்தி ருக்கிறார்.”

“அரிவாளைக்கொண்டு பிளக்கும் காலம் போய் விட்டது தம்பீ! இது சைக்கிள் செயின் காலம்!” என்று குறுக்கிட்டுச் சொன்னார் அண்ணாச்சி. பாண்டியனும் மோகன்தாஸும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள்.

“ஆண்டு கொண்டிருப்பவர்கள் பஞ்சாயத்து போர்டி லிருந்து பல்கலைக்கழக யூனியன் வரை அதிலும் தங்கள் ஆட்களே ஜெயிக்க வேண்டும் என்று வெறிபிடித்து அலை கிறார்கள். தாங்கள் ஜெயிக்க முடியாததுபோல் இருந்தால் தேர்தல்களையே நடக்கவிடாமல் செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்தச் சூழ்நிலையிலிருந்து மீள்வது நாமும் நம் தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் எந்த அளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது” என்று அண்ணாச்சி கடையிலிருந்து புறப்படு முன் எல்லாருக்கும் பொதுவாக மோகன்தாஸ் ஒர் எச்சரிக்கை செய்தான். -

எந்த முக்கியமான அவசரத் தகவலைப் பல்கலைக் கழகத்திலிருந்து உடனே தமக்குத் தெரிவிக்க வேண்டியி ருந்தாலும் எதிர்ப்பக்கத்து மருந்துக் கடைக்கு ஃபோன் செய்யும்படி பாண்டியனை வேண்டிக் கொண்டார் அண்ணாச்சி,

மோகன்தாஸும், பாண்டியனும் அண்ணாச்சி கடையி லிருந்து திரும்பும்போதே உணவு விடுதி மணி அடித்து விட்டது. அந்த முன்னிரவு வேளையில் பல்கலைக்கழகக் கட்டிடங்களும் புல்வெளிகளும், விடுதிகளும், பூங்காக்களும் வழக்கத்தை மீறிய அமைதியோடிருந்தன. ஓர் அமைதி யின்மைக்கு முன்னால் நிலவும் தற்காலிக அமைதியாகவோ அல்லது ஒரு கலவரத்தை எதிர்பார்த்து அவாவி நிற்கும் அமைதியாகவோ அது தோன்றியதே தவிர இயல்பான அமைதியாகத் தெரியவில்லை. வழக்கமாக அந்த வேளையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/46&oldid=608962" இலிருந்து மீள்விக்கப்பட்டது