பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 சத்திய வெள்ளம்

விசுவாசமில்லாத பலர் கூடி ஒரு விசுவாசமுள்ள ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. ஏனோ தானோ மனப் பான்மை என்பதே சராசரி இந்தியனின் பொதுக் குணமாக இருக்கிற வரை எப்படிப்பட்ட மோசமான ஆட்சியையும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்” என்றார் விடுதலையானவர்களைப் பார்க்க வந்திருந்த மற்றொரு தொழிற் சங்கவாதி.

சிறை வாசலில் கூடிவிட்ட மாணவர்களும் கூட்டத் தினரும் விடுதலையானவர்களை அண்ணாச்சிக் கடை வாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். செல்லும் வழியிலும் அங்கங்கே கூட்டமாக மக்கள் சேர்ந்து கொண்டதால் ஊர்வலம் பெரிதாகி வளர்ந்திருந்தது. அண்ணாச்சி என்கிற மனிதரை மல்லிகைப் பந்தலில் சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும், மாணவர்களில் எல்லாப் பிரிவுப் படிப்பில் படிக்கும் சகல மாணவர்களும் அவர்மேல் ஒரு மூத்த தமையனின் மரியாதையைச் செலுத்தி வந்தார்கள். அவருடைய பொது நலப் பணி களும், பரோபகார சிந்தையும் ஊரறிந்தவை. தோட்டத் தொழிலாளர்களும், ஏழை எளியவர்களும் அண்ணாச்சி யின் சைக்கிள் கடையைக் காந்திக்காரர் கடை என்று தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். அந்த அளவுக்கு அண்ணாச்சியின் மேல் மதிப்பு வைத்திருந்தார்கள் நகர மக்கள். ஒழுக்கமும், வாக்கு நாணயமும், எங்கே யாருக்குச் சிரமம் என்றாலும் தானே உடன் ஒடிச் சென்று உதவுகிற குணமும், எந்த நிலையிலும் பொறுமை இழக்காத மனோதிடமும் அண்ணாச்சியை எல்லோருமே மரியாதை செய்யும் தகுதிக்கு உரியவராக்கி இருந்தன. மேடைகளில் ஏறிக் கண் கூசும் வெளிச்சத்தில் நிற்கவும், சுவரொட்டி களில் பெரிதாகப் பேர் அச்சிடவும் ஆசைப்படாமல் தொண்டு செய்யவும், உழைக்கவுமே ஆசைப்படும் அண்ணாச்சியின் தனித்தன்மை காரணமாகவே அவர் பிறரால் தொழத் தக்கவர் ஆகியிருந்தார். அப்படிப் பட்டவரைப் போலீஸார் கைது செய்ததே நகரில் பெரும் பரபரப்பை உண்டாக்கி யிருந்தது. அன்று அவர் விடுதலை ஆகிவிட்டார் என்பதும் அவருக்குப் பின் கைது செய்யப்பட்டவர்களும் விடுதலை