பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 465

னாகத்தான் போய்ச் சேருவேன். அண்ணாச்சி தொண்ட னாகத் தொடங்கி தொண்டனாகவே இறந்தான்னு ஜனங்க பேசிக்கிடணுமே தவிரத் தொண்டனாக ஆரம் பிச்சு அதிலே லாபமாச் சம்பாதிச்சபுகழை முதலீடு பண்ணித் தலைவனாக இறந்தான்னு என்னைப் பத்தி நான் போனப் புறம் பேச்சு வரப்பிடாது. அதுதான் இந்த ஏழையோட ஒரே ஆசை தம்பீ”

“அண்ணாச்சி! போகிறதையும் சாகறதையும் பத்தி இப்ப என்ன பேச்சு? நீங்க ஒண்ணும் போகமாட்டீங்க. நூறு வயசு இருப்பீங்க. பாண்டியனும் கண்ணுக்கினி யாளும் பேரன் பேத்தி எடுக்கறதைக்கூட இருந்து பார்க்கப் போlங்க. போனாத் தொண்டு எதுவும் செய்ய முடியாது. இருந்தாத்தான் தொண்டு எல்லாம் செய்யலாம், பாடுபடலாம்” என்றார் மணவாளன்.

“எனக்கு மட்டும் போக ஆசையா என்ன? போகணும்னு வந்தாப் பத்து நல்லவங்களைக் காப்பாத்தறதுக்காகத் தான் நான் போவேன்! எதிரிங்க என் உயிருக்குக் கருக் கட்டிக்கிட்டு அலையறாங்க. ஆனா என்னைப் காப்பாத் திக்கணும்னு போராடி அதுக்காக நான் சாக மாட்டேன். என்னைத் தவிர மத்தவங்களைக் காப்பாத்த நான் சாகவும் தயாராயிருப்பேன். அப்படிப் பட்ட நெஞ்சுறுதியை அந்தக் காந்தி மகான் எனக்குத் தந்திருக்காரு...”

“அந்தக் காந்தி மேலே ஆணையாக இனிமே நீங்க இப்படியெல்லாம் பேசமாட்டேன்னு முதல்லே சொல் லுங்க இல்லாட்டி எங்களுக்கெல்லாம் கோபம் வரும். நாங்களெல்லாம் இருக்கறப்ப உங்களை எவன் நெருங்க முடியும்? நீங்க வெறும் அண்ணாச்சி மட்டும் இல்லை! இங்கே நீங்க ஒரு தத்துவம், யூ ஆர் த ஒன்லி பெர்ஃபெக்ட் எம்பாடிமெண்ட் ஆஃப் சோஷல் செர்வீஸ், இங்கே பெருக்கெடுத்திருக்கும் சத்திய வெள்ளத்தின் ஊற்றுக்கண் நீங்கள்தான் என்பது உங்களுக்கு ஒரு வேளை தெரியாமலி ருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது நன்றாகத் தெரியும். நீங்கள் இல்லாத மல்லிகைப்பந்தலை நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இதோ இந்தக் கடைக்குப் பக்கத்

ச.வெ.-30