பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 471

அதிபரும் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினருமான ஆனந்தவேலு மாணவர்களின் எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு என்றே நிறையப் பணம் செலவழிக் கவும் தயாராயிருந்தார். மல்லை இராவணசாமி வெளியூர் களிலிருந்தும் தம் கட்சியின் அடியாட்களை மல்லிகைப் பந்தலில் குவித்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டி ருந்தார். மணவாளன் செய்திருந்த முன்னேற்பாடுகளின் படி வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் பெருந்தொகை யாக மல்லிகைப் பந்தலில் வந்து குவிந்து கொண்டி ருந்தார்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மதுரையிலிருந்தும் லாரி லாரியாகப் போலீஸ்காரர்கள் மல்லிகைப் பந்தலில் கொண்டுவந்து குவிக்கப்பட்டார்கள். ‘உடன் பிறப்பே, உயிரே, தேனே! மல்லிகைப் பந்தலுக்கு அமைச்சரை வரவேற்கக் கொடியுடன் வா! முடிந்தால் அது தடியாகவும் இருக்கட்டும்! எதிரிகளின் தலைகளுக்கு இடியாகவும் இருக்கட்டும்! என்பதுபோல் இராவணசாமி கையொப்பமிட்டு அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள தமது கட்சி ஆட்களை வரச்சொல்லிச் சுற்றறிக்கையே அனுப்பி யிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் ஒன்று எப்படியோ தேசிய மாணவர்கள் வசம் சிக்கியிருந்தது. பல்கலைக் கழக மாணவர்களில் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்பு உள்ளவர்கள் வர வரக் குறைந்து நூற்றுக்கணக்கில்கூட இல்லாமற் போயிருந்தார்கள். பேரவைத் தேர்தலில் தோற்றுவிட்ட எரிச்சலில் அன்பரசன், வெற்றிச் செல்வன் போன்ற ஒருசில மாணவர்களும், மிகச் சில மாணவிகளும் அங்கே பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கிணியாள். ஆகியவர்களைக் கொண்ட தேசிய மாணவர்களின் பெரும்பான்மை அணிக்கு எதிரிகளாக இருந்தார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைந்து போயிருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைத்தது. அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் போலீஸார் அவர்களை நெருங்காதபடியும், அவர்கள் சுட்டிக் காட்டுகிறவர்களை உடனே எதுவும் செய்யும்படியும் ஆளும் கட்சி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்திருந்தது. பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்கத் தேசிய மாணவர்