பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சத்திய வெள்ளம்

வராந்தாவில் ஒரு கோடியிலிருந்த கண்ணாடி அடைப்பு களாலாகிய டெலிஃபோன்பூத் அருகேயே போய் நின்று கொண்டான் பாண்டியன். விடுதி அறைகளின் ஒவ்வொரு சிறகின் இறுதியிலும் இப்படி டெலிபோன் வசதி இருந்தது. ஆனால் இந்த ஃபோன்களிலிருந்து பல்கலைக் கழக எல்லைக்குள் மட்டும்தான் பேசவும் கேட்கவும் முடியும். வெளியே நகருக்குள் பேச வேண்டுமானால் வார்டன் அறைக்குப் போகவேண்டும். சென்ற ஆண்டு பெரிய தொல்லையாக இருக்கிறது’ என்று இந்த ஃபோன் இணைப்புக்களையெல்லாம் எடுத்துவிட ரிஜிஸ்திரார் முனைந்தபோது மாணவர்கள் போராடி வெற்றி பெற்றதை நினைத்துக் கொண்டான் பாண்டியன். வரப் போகிற ஃபோனை எண்ணி ஆவலும், களிப்பும் நிறைந்த மனத் தோடு காத்திருந்தான் அவன். எதிர்பார்த்துக் காத்திருந்த அழைப்பு வருவதற்குத் தாமதம் ஆகஆக அவன் ஆவலும் பரபரப்பும் அதிகமாயின. காத்திராதபோது மிகவும் சாதாரணமான ஒன்றுகூட அதை எதிர்பார்த்துக் காத்தி ருக்கும்போது மிகப் பெரிதாகிவிடுகிறது. எதற்காகக் காத்திருக்கிறோமோ அதைப் பற்றிய ஆவல்களும், கவலை களும் கற்பனைகளும் பெரிதாகி விடுகின்றன. கால் மணி நேரத்துக்கு மேல் அவன் மனத்தை அலைபாய விட்டபின் அந்த அழைப்பு வந்தது. டெலிபோன் கூண்டுக்குள் நுழைந்து கதவை உட்புறமாக அடைத்துக் கொண்டு ஃபோனை எடுத்தான் அவன். அவனுடைய பெயரையும் அறை எண்ணையும் குறிப்பிட்டுக் கண்ணுக்கினியாளின் குரல் விசாரித்தது.

“நான் பாண்டியன்தான் பேசுகிறேன்” என்று அவன் கூறிய பின்பே அவள் மேலே சொல்ல வேண்டியதைச் சொல்லத் தொடங்கினாள். -

“உங்களை நாலாவது தடவையாக இப்போது கூப்பிடு கிறேன். நல்ல வேளையாக இப்போதாவது கிடைத்தீர்கள். நான் கேள்விப்பட்டது உண்மைதானா? சாயங்காலம் நான் அண்ணாச்சி கடைக்கு ஃபோன் செய்து விசாரிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/48&oldid=608917" இலிருந்து மீள்விக்கப்பட்டது