பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 479

முன்னாடி நிற்கவே கால் கூசும் எனக்கு. வேறே ஏதாவது பேசு.”

அன்றிரவு ஒன்பதரை மணிக்குள்ளேயே எல்லா மாணவ மாணவிகளும் வீதிக்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று பல்கலைக் கழகப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மறுநாள் காலை பட்டமளிப்பு விழா கையினால் மாணவர்கள் வெளியே தங்கி ஏதாவது கூடிப் பேசித் திட்டமிடக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் துணைவேந்தர் இந்த ஏற்பாட்டைக் கண்டிப்பாகச் செய்திருந்தார். ஒன்பதே முக்கால் மணிக்கு ஒவ்வொரு விடுதி வார்டனும் அறை அறையாகப் போய் அட் டெண்டன்ஸ் பார்த்து அறையில் இல்லாத மாணவர் களின் பட்டியலைத் தமக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கடுமையாகக் கட்டளை இட்டிருந்தார். மாணவர் கள் தம்மிடம் கூறியிருந்தபடி அமைதியாக இருக்கமாட்டார் களோ என்று திடீரென்று அவருக்கே ஒரு சந்தேகம் முதல் நாளிரவு வந்திருந்தது. ஆர்.டி.ஓ. மூலம் கிடைத்த சி.ஐ.டி. ரிப்போர்ட் வேறு சரியாக இல்லை. மேலேயிருந்து அமைச்ச ரோட பி.ஏ. வேறு, “கவனித்துச் செயல் புரியுங்கள்” என்று ஃபோன் மூலம் எச்சரித்த வண்ணமாய் இருந்தார். சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலு தந்திரமாகத் துணைவேந்தருக்கு ஒரு யோசனை சொல்லியிருந்தார். புதிதாக அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்த போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டல் நியூ பிளாக்கின் மூன்று மாடிக் கட்டிடத்தில் மொத்தம் நூற்றைம்பது அறைகள் இருந்தன. அந்த நூற்றைம்பது அறைகளுமே ‘பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்கள் தங்க ஒதுக்கப்படுகிறது என்று ஒரு குறிப்பை யூனிவர்ஸிடி ரிஜிஸ்தரில் எழுதிக் கொண்டு அவைகளில் மல்லை இராவணசாமியும் தானும் தயார் செய்திருந்த கட்சி அடியாட்களைச் சவுக்குக் கட்டை, சேடாபுட்டிகள், கற்கள் சகிதம் குடியேற்றி வைக்குமாறு ஆனந்தவேலு கூறிய யோசனையைத் துணைவேந்தர் ஏற்றுக் கொண்டு விட்டார். இரவு பதினொரு மணிக்குமேல் இந்த