பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 சத்திய வெள்ளம்

அடியாட்களைக் குடியேற்றும் காரியம் பரம ரகசியமாக நடந்தது. குடித்துவிட்டு வெளியேறிய கட்சி ஆட்கள் புது பிளாக் கட்டடத்தில் குடியேறுவதை முதலில் பார்த்த லெனின் தங்கத்துரை உடனே பாண்டியனின் அறைக்குத் தேடி வந்து இதைச் சொன்னபோது பாண்டியன் அதிர்ச்சி அடைந்தான். பூபதி ஹாலைச் சுற்றியும், வேறு இடங் களிலும் போலீஸ் வேறு நிரப்பப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிந்தது. தகவலைத் தெரிவித்துவிட்டு, “நாம் என்ன செய்யலாம்?” என்று லெனின் தங்கத்துரை கேட்டார். “கொஞ்சம் பொறுங்க பிரதர்! நாம் யாரும் இப்போது வெளியே போய்த் திரும்ப முடியாது. ஹாஸ்டல் வாட்டர் பாய் ஒருவன் இங்கே கீழே, செர்வண்ட்ஸ் ரூமில் தூங்கிக் கொண்டிருப்பான். அவனை எழுப்பி மெல்லத் தகவலைச் சொல்லி அண்ணாச்சி கடைக்கு அனுப்புவோம். மணவாளன் அண்ணன் அங்கேதான் அண்ணாச்சி கடையிலே இருப்பாரு. இதைப் பற்றி அவரு அபிப்பிராயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு மேலே யோசிப்போம்..” என்று சொல்லி விட்டுப் பாண்டியன் கீழே போய் அந்தப் பையனை எழுப்பி ஒரு சிறு தாளில் லெனின் தங்கத்துரை கூறிய விவரத்தை எழுதிக் கொடுத்து அவனை அண்ணாச்சிக் கடைக்கு அனுப்பி வைத்தான். பையன் திரும்பி வருவதை எதிர்பார்த்து அறையில் காத்திருந்த போது உடனிருந்த மற்ற மாணவர்களுக்கும், லெனின் தங்கத்துரைக்கும் பாண்டியனுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. மயிலே மயிலேன்னா இவங்க இறகு போட மாட்டாங்க பாண்டியன்! நாம அமைதியா எதிர்த்தாலும் அவங்க போலீஸையும் குண்டர்களையும் விட்டு நம்மை யெல்லாம் உதைச்சு அவமானப்படுத்தப் போறாங்க... நாமும் இப்பவே அவங்களைப் பதிலுக்கு அவமானப் படுத்தத் தயாராக வேண்டியதுதான். இதோ பாரு? கீழே ஹாஸ்டல் மெஸ் கிச்சனுக்குப் பக்கத்திலே அடுப்பெரிக்க ஸ்டாக் பண்ணியிருக்கிற சவுக்குக் கட்டை மலை மலை யாகக் குவிச்சிருக்கு. நாமும் அறைக்கு அறை இப்பவே நாலு கட்டைகளை எடுத்துத் தயாராக ஒளிச்சு வைச்சுக்க