பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 483

வேண்டிய முகவரி பின்வருமாறு’ என்று எழுதிக் கீழே துணைவேந்தரின் விலாசம் வரையப்பட்டிருந்தது. படித்த வர்களுக்கு வேலையில்லை! வேலையற்றவர்களுக்கு எதற்குப் பட்டம்?” என்று ஒரிடத்தில் தார் ரோட்டில் பூதாகாரமான எழுத்துக்களில் எழுதியிருந்தது. பட்ட மளிப்பு விழா மண்டபத்துக்குள் போக வேண்டுமானால் அந்தத் தார்ரோடு வழியாகத்தான் கடந்து போயாக வேண்டும். காலை ஏழுமண முதலே அங்கே படித்துக் கொண்டிருந்த சகல பிரிவு மாணவர்களும் மாணவிகளும் எங்கிருந்தெல்லாமோ பல ஊர்களிலிருந்து பட்டம் பெற வந்திருந்த எல்லா வகை மாணவ, மாணவிகளும் கட்டுப் பாடாகப் பட்டடமளிப்பு விழாக் கூடத்தைச் சுற்றி யாரும் உள்ளே நுழையாதபடி கோட்டைச் சுவர் எடுத்ததுபோல் அணிவகுத்துக் கை கோர்த்தபடி நின்றுவிட்டார்கள். மணவாளனும், பாண்டியனும், மோகன்தாஸும் பட்ட மளிப்பு விழாக் கூடத்தின் பிரதான வாயிலருகே நின்று கொண்டிருந்தார்கள். லெனின் தங்கத்துரை குழுவினர் பல புது முறை எதிர்ப்புக்களைச் செய்திருந்தனர். பல்கலைக் கழக மைதானத்தில் இருந்த ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு பிராணி தன் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைத் தொங்கவிட்டுக் கொண்டு நிற்கும்படி கட்டப்பட்டிருந்தது. ஒரு மரத்தடியில் எருமை ஒன்று கழுத்தில் நான் ஒரு டாக்டர் பட்டம் பெறுகிறேன்’ என்ற வாசக அட்டை கட்டப்பட்டு நின்றது. இன்னொரு மரத் தடியில் ஐந்தாறு சொறி நாய்கள் கழுத்தில் இதே வாசகத் துடன் குரைத்துக் கொண்டு நின்றன. வேறொரு மரத் தடியில் ஒரு கழுதை இதே கோலத்தில் நின்றது. அதற்குப் பட்டமளிப்பு விழா உடை கூடப் போர்த்தப்பட்டிருந்தது. எட்டேகால் மணிக்கு முன்பிருந்ததைவிட மேலும் லாரி லாரியாக உள்ளே வந்த போலீஸார் இந்த நாய்களையும், கழுதைகளையும் அப்புறப்படுத்தவே அரை மணி நேரம் சிரமப்பட்டு முயல வேண்டியிருந்தது. ஒரு போலீஸ் அதிகாரி வந்து சாமர்த்தியமாக, “இவற்றை எல்லாம் செய்தது யார்?” என்று எல்லா மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தார். தெரியாது’ என்று ஒரே பதில்தான்