பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 - சத்திய வெள்ளம்

வாளனோடு கைகுலுக்கிவிட்டு “கேன் ஐ டு எனிதிங் ஃபார் யூ ஐ யாம் யுவர் ஃப்ரண்ட். பிலீவ் மீ.. அண்ட் டெல் மி யுவர் க்ரீவன் ஸஸ்” என்று அவர் வினவிய அன்பான தோரணை மணவாளனுக்கு மிகவும் ஆறு தலளித்தது. மணவாளன் தங்கள் குறைகளையும், அமைச் சர் கரியமாணிக்கத்துக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில் உள்ள சூழ்ச்சிகளையும் அப்போது அங்கு மாணவர்கள் தாக்கப்படுவதையும் ஆங்கிலத்தில் விவரித்தார். கவர்னர் சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “ஹெள கேன் ஐ ப்ரிவெண்ட் திஸ். ஐயாம் ஆல்ஸோ ஹெல்ப் லெஸ். லைக் யூ. ஐயாம் ஒன்லி எ கவர்னர் ஆஃப் தி ஸ்டேட்” என்றார்.

“நாட் ஒன்லி தட்.யூ ஆர் ஆல்ஸோ தி சான்ஸ்லர் ஆஃப் திஸ் யூனிவர்ஸி.டி. சார்!”

“யெஸ் பட்.” என்று கூறியபடியே ஏதோ சிந்தித்துக் கொண்டே அவர்களிடம் விடைபெற்று உள்ளே சென்றார் கவர்னர்,

அவர்கள் ஏதாவது செய்யக்கூடும் என்று மணவாள னுக்கு நம்பிக்கை இருந்தது. மாணவர்களை உடன் அழைத்துக் கொண்டு மீண்டும் பட்டமளிப்பு விழா மண்டபத்தின் அருகே வந்து மண்டபத்தை மறித்துக் கொண்டு நின்றார்கள் அவர்கள்.

அதற்குள் ஒரு மாணவன் ஓடி வந்து, “யூனிவர்ஸிடி மெடிகல் ஆபீஸர் டாக்டர் பிரசாத் வி.சி.யின் கையாளாக மாறிச் சதி செய்கிறார். இங்கே மைதானத்தில் சோடா புட்டி வீச்சிலும், அறைகளில் போலீஸாரிடமும் அடிபட்ட மாணவர்கள் எப்படி எப்போது எங்கே அடிபட்டு வந்தார் கள் என்று ஆஸ்பத்திரி ரிஜிஸ்தரில் பதிவு செய்யாமலே அவுட் பேஷண்டாகச் சிகிச்சை செய்து உடனுக்கு உடனே வெளியே துரத்துகிறார். பின்னால் நமக்குத்தான் அது கெடுதல், அண்ணன் வந்து உடனே அதைக் கவனிக்கணும்” என்றான்.

உடனே மணவாளனும் அவரோடு மோகன்தாஸும் அங்கே ஓடினார்கள். ஆஸ்பத்திரி ரிஜிஸ்தரில் சரியாகப்