பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 சத்திய வெள்ளம்

களும் மகிழ்வார்கள்! ஆனால் அமைச்சர் கையால்பட்டம் பெறுவதையோ, அவருக்கு டாக்டர் பட்டம் தருவதையோ அவர் எங்களுக்குப் பட்டமளிப்பு உரையாற்றுவதையோ நாங்கள் விரும்பவில்லை” என்று தங்கள் கருத்தை மணவாளன் ஆங்கிலத்தில் கூறியபோது சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் கேட்டார் அவர்.

மந்திரி கரியமாணிக்கத்தையும் மற்ற அமைச்சர் களையும் கலந்து பேசி இந்தக் கொந்தளிப்பான நிலையில் பட்டமளிப்பு விழா வேண்டாம் என்று தானே அவர் களுக்குச் சொல்லிய பின்பே அதை இரத்துச் செய்ததாக கவர்னர் விவரம் தெரிவித்தார்.

மாலை மூன்று மணிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப் புடன் அமைச்சர் கரியமாணிக்கமும், கல்வி அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் மல்லிகைப் பந்தல் நகரை விட்டே வெளியேறிப் போய்விட்டார்கள். புறப்படுமுன் ஆர்.டி.ஒ. வையும், இராவணசாமியையும், துணைவேந்தரையும் கூப்பிட்டு ஏதோ கோபமாய் இரைந்து இரகசியமாகச் சொல்லிவிட்டுப் போனாராம் கரியமாணிக்கம். மாலை நான்கு மணிக்கு கவர்னர் புறப்பட்டுப் போனார். நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை பல்கலைக் கழகம் ஒரளவு அமைதியாயிருந்தது.

அண்ணாச்சி வந்து மருத்துவமனையில் அடிபட்டுக் கிடந்த மாணவர்களின் தேவைகளைக் கவனித்தார். மணவாளன் பத்திரிகை நிருபர்களுக்கு ஹாஸ்டல் அறை களைக் காண்பித்து மாணவர்கள் தாக்கப்பட்டதையும். விவரித்து ரத்தக் கறைகளையும் பார்க்கச் செய்து புகைப் படம் எடுக்க உதவிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் மேல் அதிக அனுதாபமுள்ள ஒரு நிருபர் மட்டும் மணவாளனைத் தனியே அழைத்து, “எல்லாம் இதோடு முடிந்துவிட்டது என்று நினைக்கா தீர்கள்! பட்டமளிப்பு விழாவைத் தடுத்துத் தன்னை அவமானப் படுத்திவிட்ட கோபத்தில் மந்திரி போலீலை யும் கட்சி ஆட்களையும் ஆத்திரமூட்டித் தூண்டிவிட்டுப் போயிருக்கிறார். மறுபடியும் அவர்கள் எந்த நிமிஷமும்