பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 சத்திய வெள்ளம்

அண்ணனோட பெட்டிகிட்டி எல்லாம் தவிடு பொடி ஆக்கிட்டாங்க. நான் தப்பிச்சதே பெரும் பாடு.” என்று கிழிந்த சட்டையும் முழங்கை முழங்கால்களில் சிராய்ந்த இரத்தக் காயமுமாகப் பொன்னையா வந்து நின்ற காட்சியே பார்க்க வருத்தமூட்டுவதாக இருந்தது.

பல்கலைக் கழக எல்லைக்குள் விடுதி அறைகளில் நடப்பதைப் பொன்னையா வந்து முறையிட்டதைக் கேட்ட வுடன் மாலையில் தம்மிடம் அந்த நிருபர் எச்சரித்ததை நினைத்தார் மணவாளன். உடனே மணவாளனும் லெனின் தங்கத்துரையும், மோகன்தாஸும், பாண்டியனும் துள்ளி எழுந்தார்கள். .

“நீ எங்கே புறப்படறே தம்பீ! நீ உட்காரு... உன் உயிருக்கு உலை வைக்கத்தான் அவங்க ஹாஸ்டல் அறைக் கதவை உடைச்சிருக்காங்க. நீயும், தங்கச்சியும் இங்கே யிருந்து மறுபடியும் நான் சொல்கிறவரை நகரக் கூடாது. ரெண்டு பேரும் உட்காருங்க சொல்றேன்” என்று பாண்டி யனையும், கண்ணுக்கினியாளையும் அண்ணாச்சி கண்டித்து உட்காரவைத்துவிட்டார்.

ஏதோ கூற வாயெடுத்த பாண்டியனை மணவாளனே, “அண்ணாச்சி சொல்றபடி கேளு! நீயும் தங்கச்சியும் வெளியே எங்கேயும் வரவேண்டாம் பாண்டியன்!” என்று தடுத்துவிட்டார்.

“மணவாளன்! நீங்க சும்மா போகறதுலே பிரயோசன மில்லே. யூனியன் வாசல்லே போயி கொஞ்சம் ஆளுங் களோட போங்க. இங்கேயும் கொஞ்சம்பேரை அனுப் பிட்டுப் போங்க..” என்றார் அண்ணாச்சி. *

“நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க பாண்டியனை யும் தங்கச்சியையும் கவனிச்சுக்குங்க” என்று கூறிவிட்டு உடன் இருந்தவர்களுடன் விரைந்தார் மணவாளன்.

“ஹாஸ்டல் மாணவர்கள் உடனே விடுதி அறை களைக் காலி செய்யணும்னு போலீஸ் வானிலிருந்து மெகபோன் மூலமா அறிவிச்சிக்கிட்டிருக்கறப்பவே லைட் எல்லாம் போயிடிச்சு. உடனே புகுந்து உதைக்க ஆரம்பிச் சிட்டாங்க வந்த ஆட்கள் குடிவெறியிலே இருக்காங்க.