பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம்

ரவு எட்டு மணி சுமாருக்குப் பாண்டியனுக்கு வேண்டியவனான ‘யூனிவர்ஸிடி ஹாஸ்டல் வாட்டர் பாய் ஒருவன் வந்து அண்ணாச்சிக் கடையில் முன்னெச் சரிக்கை செய்துவிட்டுப் போனான்.

தமக்கு அங்கே டாக்டர் விருது தரப்படுவதற்கு இருந்த பட்டமளிப்பு விழா, மாணவர்கள் கலவரம் காரண மாக நடைபெற முடியாமற் போனதால் ஏமாற்ற மடைந்த அமைச்சர் கரியமாணிக்கம் போகிற போக்கில் தம்மைச் சந்திக்க வந்த பத்திரிகை நிருபர்களிடம் “மல்லிகைப் பந்தலில் என் உயிரைப் பறிக்கச் சதி நடந்தது. மயிரிழை யில் உயிர் தப்பினேன்” என்பதுபோல் நாடக மாடிக் கதை கட்டிவிட்டுப் போயிருந்தார்.

மல்லை இராவணசாமி, கோட்டம் குருசாமி போன்ற கட்சி ஆட்களிடம் ஆத்திரத்தோடு, “இந்தச் சுண்டைக்காய்ப் பசங்களை அடக்கி ஒடுக்கி வைக்க நாலு ஆட்களைத் தயார்ப் பண்ணி உதைக்க முடியாத நீங்கள்ளாம் என்னய்யா மனுஷன் ”... என்றும் அமைச்சர் கோபமாகக் கேட்டு விட்டுப் போனாராம். அதில் ரோஷம் பொத்துக் கொண்டு வந்த காரணத்தால் சாயங்காலத்துக்கு மேலே மீண்டும் நானுறு ஐந்நூறு முரடர்களை வாடகைக்குப் பிடித்துக் கள்ளச்சாராயமும் ஊற்றி வெறி ஏற்றி, “பட்டமளிப்பு விழா நடக்கவிடாமல் கலவரம் செய்த மாணவர்களை எங்கே கண்டாலும் விடாதீர்கள். புகுந்து உதையுங்கள். போலீஸ் உங்களை ஒன்றும் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அரிவாளும், சூரிக் கத்தியும், கம்பும், கடப்பாறையும், சைக்கிள் செயினும், சவுக்குக் கட்டையு மாக அந்தத் தடியர் கூட்டத்தை விரட்டியிருந்தார் இராவணசாமி. - - -

“பாண்டியன் அண்ணனை அறையிலே காணாததால் ஏமாற்றம் அடைந்திருக்கும் அந்தக் கூட்டம் நேரே இங்கே உங்க கடைக்குத்தான் தேடி வரும். கவனமாக இருங்க அண்ணாச்சி! பாண்டியன் அண்ணனையும் கண்ணுக் கினியாளையும் வெளியே எங்கேயும் போகவிட்டுடாதீங்க, முரடங்க வெறி பிடிச்சுத் தேடிக்கிட்டு அலையறாங்க..” என்று