பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 497

அபாயம் இருப்பது புரிந்தது. ‘கடையிலிருந்து வெளியேறிப் போகும்போது நடு வழியில் அவர்கள் இருவரும் எதிரி களால் தாக்கப்பட்டால் என்ன செய்வது? என்ற தயக்கம் வந்தபோது எங்கும் போவதைவிட அவர்கள் தம் கடையி லிருப்பதே பாதுகாப்பானது என்று முடிவாகத் தோன்றியது அண்ணாச்சிக்கு. கடைப் பையன்களை அனுப்பிய பின் உட்புறமாகத் தாழிட்டுவிட்டுக் க்ண்ணுக்கினியாளும் பாண்டியனும் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து அவர் களோடு உடன் அமர்ந்து இட்டிலிப் பொட்டலங்களைப் பிரித்தார் அவர் எந்தப் பதற்றமும் இன்றி அவர் நிதானமா யிருந்தது பாண்டியனுக்கு வியப்பளித்தது.

“மணவாளன் அண்ணன் ஏன் இன்னும் திரும்பலே? எல்லோரும் வந்தப்புறம் சேர்ந்து சாப்பிடலாமே?” என்றான் பாண்டியன், அவன் குரலில் பதற்றம் மிகுந்திருந்தது.

“நாம சாப்பிடலாம்! அண்ணன் வர நேரமாகும்னு தோணுது! தங்கச்சி! அந்தப் பானையிலேருந்து மூணு கிளாஸ்லே தண்ணி எடுத்து வை.” என்று அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடுதிப்பென்று மின்சாரம் போய் விளக்கு அணைந்துவிட்டது.

இருட்டிலேயே துழாவி மெழுகு வத்தியும் தீப்பெட்டி யும் எடுத்துப் பொருத்தி வைத்தார் அவர். மின்சாரம் தானாகப் போயிருக்காது என்று அண்ணாச்சி சந்தேகப் பட்டார். தெருக்கோடியில் அந்த வீதிக்கான ஃப்யூஸ் கேரியர்கள் அடங்கிய தகரப் பெட்டி இருக்கிறது. அதில் யாராவது விஷமிகள் ஃப்யூஸை எடுத்து விட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது அண்ணாச்சி யால், அப்போதும் அவர் பரபரப்படையவில்லை.

இன்னும் அவர் இட்டிலி சாப்பிட்டு முடிக்கவில்லை. கண்ணுக்கினியாள், பாண்டியன் இருவரும் சாப்பிட்டுக் கைகழுவியிருந்தார்கள். அவ்வளவில் கடை முகப்பில் திமுதிமு வென்று கூச்சலும் வெறிக்கூப்பாடுமாக ஆட்கள் ஓடிவரும் ஒசைகள் கேட்டன. அந்தப் பயல் பாண்டியன் வேறெங்கேயும் போயிருக்கமாட்டான்! இங்கேதான் ஒளிஞ்சிக்கிட்டிருப்பான். தெருவிலே இழுத்தெரிஞ்சு

ச.வெ-32