பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 சத்திய வெள்ளம்

கண்ணுக்கினியாள் வாய்விட்டு அழத் தொடங்கி யிருந்தாள். பாண்டியனின் விழிகளிலும் நீர் மல்கிவிட்டது. அவர்கள் இருவருக்கும் உடல் காரணம் தெரியாமலே பதறி நடுங்கியது. நெஞ்சு விரைந்து அடித்துக் கொண்டது. டார்ச் ஒளியைப் பாய்ச்சியபடி அவர்கள் தெருவின் நடுப்பகுதிக்குப் போனபோது அங்கே கண்ட காட்சி பொறுத்துக் கொள்ள முடியாதபடி கோரமாக இருந்தது.

“அண்ணாச்சி!” என்ற கதறல் ஒரே சமயத்தில் அவர்கள் இருவர் தொண்டையிலிருந்தும் எழுந்து வீதியில் எதிரொலித்தது. குருதி உறைந்து ஸ்தம்பித்துப் போய் நின்றார்கள் அவர்கள்.

அங்கே மகாத்மா காந்தியின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்தபடி இரத்த வெள்ளத்தில் கிடந்தார் அண்ணாச்சி, கழுத்தின் முன்புறமும், பிடரியில், தோள் பட்டையில், அடிவயிற்றில், விலாவில் என்று அவர் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. வெறியேறிய முரடர்கள் அவர் உடலைக் கத்தியால் சல்லடைக் கண்களாகத் துளைத்திருந்தார்கள்.

கடையை அடைக்குமுன் சாமி படங்களுக்கு மாலை போட்டுக் கும்பிட்டு, திருநீறு பூசிக் குங்குமம் இட்டுக் கொண்ட அண்ணாச்சியின் முகம் அப்போதிருந்தது போலவே பளிச்சென்று இருந்தது. மரண வேதனையை அனுபவித்த ஒரு முகமாக அது தெரியவில்லை. பிறரைக் காப்பதற்காகத் தன்னை அழித்துக் கொண்டுவிட்ட ஒரு யோகி குருதி வெள்ளத்தில் காந்தியடிகளின் படத்தைத் ಟ್ಜ-+ படுத்து உறங்குவது போலிருந்தது அந்தக் &ITt 895).

பாண்டியனின் கையிலிருந்து நடுக்கத்தில் டார்ச் நழுவியது. அப்படியே அந்தப் புனித உடலின் தலைப் பக்கம் அமர்ந்து கைகூப்பிய வண்ணம் மாலை மாலை யாகக் கண்ணிர் வடித்தான் அவன். கண்ணுக்கினியாள் கதறி அழத் தொடங்கிவிட்டாள்.