பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 503

“ரெண்டு நாட்களுக்கு முன்னேதானே, என்னிக் காவது நான் போயிட்டாலும் தொண்டனாகத்தான் போய்ச் சேருவேன். தொண்டனாக ஆரம்பிச்சு அதிலே சம்பாதிச்ச புகழை முதலீடு பண்ணித் தலைவனா இறந்தான்னு என்னைப் பத்தி நான் போனப்புறம் பேச்சு வரப்படாது. என் உயிரைக் காப்பாத்திக்கணும்னு போராடி அதுக்காக நான் சாகமாட்டேன். என்னைத் தவிர மத்தவங்களைக் காப்பாத்த நான் சாகவும் தயாராயிருப்பேன்னு அச்சானியம் போலப் பேசினாரு. சொன்னபடியே ஆயிடிச்சே” என்று அழுகைக் கிடையே உடைந்த குரலில் கண்ணுக்கிணியாள் புலம்பினாள்.

“அண்ணாச்சி சாகறப்பக்கூட ஐயோ! கொல் றானேன்னு கதறலே. காந்தி ஹே ராம். என்று சொல்லி விட்டுப் போன மாதிரி முருகா கடவுளேன்னு சொல்லிட்டு உயிரை விட்டிருக்காரு” என்றான் பாண்டியன்.

கண்ணுக்கினியாள் அவருடைய சாவைப் பொறுக்க முடியாமல் சொன்னாள்: “எங்க நாயினா அடிக்கடி சொல்வாரு. பெரிய முனிவர்கள், யோகிகள் எல்லாம் சாகறப்போ சாதாரண ஜனங்களைப் போல் “ஐயோ அப்பான்னெல்லாம் கதறி வேதனைப்பட்டுச் சாக மாட்டாங்களாம். எப்பவாவது ரொம்ப வேர்க்கறப்போ சட்டையைக் கழற்றிப் போடற மாதிரி உடம்பை விட்டு விட்டு நீங்கிப் போய் விடுவாங்களாம். நம்ம அண்ணாச்சி யும் அப்படித் தான் நம்மை விட்டுப் போயிட்டாரு.”

இரவு பதினோரு மணிக்குப் போலீஸ் வந்தது. நடந்ததை அப்படியே சொல்லும்படி செய்து பாண்டி யனிடமும் கண்ணுக்கினியாளிடமும் ஸ்டேட்மெண்ட் கேட்டு எழுதிக் கொண்டார்கள்.

“எல்லாமே இருட்டில் நடந்திருக்கிறது. யார் கொன்னாங் கன்னு கண்டுபிடிக்கிறது சிரமம்” என்று போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் கேட்டு, “ஒரு கெட்டவரைக் கொன்ற கதிரேசனையும் பிச்சைமுத்து வையும் சுலபமாக இந்தப் போலீஸால் கண்டு பிடித்துவிட முடிகிறது. ஆனால் ஒரு நல்லவரைக் கொன்றுவிட்ட