பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 505

“இதற்கெல்லாம் இந்தக் கையாலாகாத விஸிதான் காரணம்: ஹியர் ஆஃப்டர் ஹி ஹாஸ் நோ ரைட் டு கன்டினியு அஸ் வி.ஸி. இமிடியட்லி ஹி ஷாட் ரிஸைன் அண்ட் கெட் எவெ” என்று ஆத்திரமாக இரைந்தார், ஜுவாலஜி பேராசிரியர் தங்கராஜ். அப்போது அருங் கால்ை மூன்றரை மணி இருக்கும்.

குளிரைப் பொருட்படுத்தாமல் பெருங்கூட்டம் அங்கே காத்திருந்தது. விடிந்ததும் கூட்டம் இன்னும் அதிகமாகியது. -

“இந்தப் பல்கலைக் கழகத்தின் காவல் தெய்வம் போய்விட்டது. கோவில்தான் மீதம் இருக்கிறது” என்றார் உள்ளூர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர். பல்கலைக் கழகத்தின் எல்லாப் பிரிவு மாணவர்களும் பிறருமாக அங்கே கூடியிருந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைக் கொதிப்படையாமல் அமைதியோடு இருக்கச் செய்ய மணவாளனும் பாண்டியனும் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது.

“சத்திய அவதாரமான மகாத்மா காந்தியின் படத்தை நெஞ்சோடு அனைத்துக் கொண்டு இறந்து போன ஒருவருக்கு நாம் மரியாதை செய்வதில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பழி வாங்குவதோ, வன்மம் தீர்ப்பதோ இறந்தவருக்கு நன்றி செலுத்துவ தாகாது” என்று துடிதுடிப்போடு ஆத்திரம் அடைந்திருந்த ஒவ்வொரு மாணவனையும் கைகளைப் பற்றிக்கொண்டு உருக்கமாக வேண்டிக் கெஞ்சினார் மணவாளன்.

இரவே கொடுத்திருந்த தந்தி கிடைத்து மணவாளனின் தந்தை, கண்ணுக்கினியாளின் தந்தை, வேறு சில தேசியத் தலைவர்கள் எல்லோருமாக ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு மதுரையிலிருந்து காலை எட்டு மணி சுமாருக்கு மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். - பத்து மணிக்கு அண்ணாச்சியின் அந்திம யாத்திரை தொடங்கியது. கறுப்புச் சின்னமணிந்த மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும், தொழிலாளர்களும், நகர