பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 சத்திய வெள்ளம்

கடைசியாகப் பேராசிரியர் பூரீராமன் கடமையைக் செய்! பலனை எதிர்பாராதே என்னும் கீதாசாரியனின் தத்துவப்படி வாழ்ந்தவர் அண்ணாச்சி’ என்று பேசினார். மயானத்திலிருந்து எல்லாரும் திரும்பப் பிற்பகல் மூன்று மணிக்குமேல் ஆகிவிட்டது.

大 ★ ★

மறுநாள் முதல் மாணவர்கள் பல்கலைக்கழக வகுப்புக்களைப் புறக்கணித்துத் துணைவேந்தர் பதவி விலகுகிறவரை வேலை நிறுத்தம் என்று அறிவித்தனர். மூன்றாம் நாள் துணைவேந்தர் ராஜிநாமாச் செய்தார்.

மாணவர்கள் சத்திய வெள்ளமாகப் பெருகவே அதற்கு அஞ்சிய அரசாங்கம் ஆர்.டி.ஓ.வையும் சஸ்பெண்ட் செய்தது. இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஊரிலேயே தென்படவில்லை. எங்கோ தலைமறைவாகி ஒடியிருந்தனர். மந்திரிகள் மல்லிகைப்பந்தலுக்கு வரவே LIli_1_!LIL...L_ITJJ,55@r.

இரண்டு மாதங்கள் கழித்து நடந்த மல்லிகைப்பந்தல் நகர சபைத் தேர்தலில் இராவணசாமியின் கட்சி ஆட்கள் ஒருவர்கட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சியினர் சார்பில் நின்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். அந்த ஆண்டு பரீட்சைகள் முடிந்து பல்கலைக்கழகம் விடு முறைக்காக மூடுவதற்கு முன்பே புதிய துணைவேந்தர் பதவிக்கு வந்தார்.

விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் திறந்த முதல் நாளன்று பழைய அண்ணாச்சி கடை இருந்த இடத்தில் ‘அமரர் அண்ணாச்சி தேசீய வாசக சாலை’ என்ற பெயரில் ஒரு புதிய நூல் நிலையம் திறக்கப்பட்டது.

புதிய துணைவேந்தர் மாணவர்களின் வேண்டு கோளை ஏற்று அந்தத் திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்தார். புதிய நகரவைத் தலைவர் அதைத் திறந்து வைத்தார். மணவாளன் நூல் நிலையத்தின் உள்ளே அண்ணாச்சியின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.