பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 சத்திய வெள்ளம் “இருட்டிவிட்டது” என்றாள் கண்ணுக்கினியாள். “மறுபடியும் விடியும்! கவலைப்படாதே” என்றான் பாண்டியன். -

சாலையில் அவர்கள் மூவரும் சேர்ந்து நடந்தபோது சுகமான குளிர்க் காற்று வீசியது. மரங்கள் அசைந்தாடின. முருகன் கோயில் மணி கணிர் கணிர் என்று கம்பீரமாக ஒலித்தது. வீதி விளக்குகள் தவம் செய்வது போல் பணி மூட்டத்தில் மங்கலாக நின்றன. மலைக் குளிர் மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்கியது.

மணவாளன் முன்னே வேகமாக நடந்து போய் விட்டதால் கண்ணுக்கினியாளும் பாண்டியனும் சற்றே பின் தங்கி நடந்தனர். - “ரொம்பக் குளிராயிருக்கு!” “இந்தா இதை அணிந்துகொள்” என்று தனது உல்லன் கோட்டைக் கழற்றிப் பரிவோடு அவளுக்கு அணிவித்தான் பாண்டியன். அவர்கள் தொடர்ந்து இணையாகப் பாதையில் முன்நோக்கி மேலே நடந்தார்கள்.