பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைவுரை

படித்தவர்களும், படிக்கிறவர்களும், படிப்பிக்கிறவர் களும் நிறைந்த ஒரு பல்கலைக் கழகத்தைப் படிக்காத தொண்டன் ஒருவன் அர்த்தமுள்ளதாகச் செய்ததைப் பற்றிய கதை இது.

இளைஞர்களைச் சத்திய வெள்ளமாகப் பெருகச் செய்த ஊற்றுக்கண் மல்லிகைப் பந்தலில் அண்ணாச்சி யாக இருந்தார். அது வேறோர் ஊரில் வேறொரு பெயரில் இருக்கலாம். ஊரும் பெயரும் வேறுபடலாம். ஆனால் விளைவுகள்தான் முக்கியம். கல்லாதவர்களின் அறியாமையைவிடக் கற்றவர்களின் அறியாமைகளே அதிகமாக உள்ள நாடு இது. இல்லாதவர்களின் வறுமை களும்--ஏன் ? இருப்பவர்களின் வறுமைகளுமே இந்நாட்டில் சேர்ந்து தெரிகின்றன. இல்லாதவர்களின் வறுமையை உணரத் தெரிந்த இருப்பவர்களும், இருப்பவர் களின் வறுமைகளை மன்னிக்கத் தெரிந்த சமூகமும் வருகிறவரை இங்கே போராட்டம்தான். இல்லாதவர் களிடம் பொருளால் வறுமை என்றால் இருப்பவர்களிடம் அதை உணர்வதிலும் புரிந்து கொள்வதிலுமே வறுமை இருக்கிறது. இளைஞர்களிடையே அமைதியின்மையும், கொந்தளிப்பும், போராடும் குணமும் இருப்பதற்கான காரணங்கள் முதியவர்களால் உண்டாக்கப்பட்டவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சந்தர்ப்பவாதமும், அதிகார துஷ்பிரயோகமும் கற்றவர்களின் அறியாமை களும் உள்ள வரையில் இளைஞர்கள் இங்கே வெள்ள மாகப் பொங்கிப் பெருகிக் கொண்டுதான் இருப்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது.

இந்த நாவல் அப்படி இளைஞர்கள் பெருகுவதையும், பொங்குவதையும் தவிர்க்க முடியாத ஒரு காலப் பின்னணியைக் கொண்ட கதையில் யதார்த்தமாகச் சித்திரிக்கிறது. வருங்காலத்தில் பல சூழ்நிலைகளெல்லாம்: