பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - சத்திய வெள்ளம்

னும், வெற்றிச் செல்வனும், இன்னும் ஒருநாலைந்து மாணவர்களும் வந்து காத்திருந்தனர். துணைவேந்தர் தாயுமானவனாருக்கு அருகில் ஆளும் கட்சியின் உள்ளூர்க் கோட்டச் செயலாளர் அவரது அந்த உருவத்துக்குச் சிறிதும் பொருத்தமின்றிக் கம்பளிக் கோட்டுடன் அதற்கு மேல் தரைவரை புரளும் மேல் துண்டு சகிதம் அமர்ந்தி ருப்பதை உள்ளே நுழைந்ததுமே பாண்டியனும், மோகன் தாஸும் கவனித்து விட்டார்கள். -

துணைவேந்தர் பேசத் தொடங்கினார்:

“எல்லோரும் வந்தாச்சு இல்லியா? யெஸ். லெட் அஸ் ஸ்டார்ட்.” - மோகன்தாஸ் அவரை மேலே பேசவிடாமல் குறுக்கிட்டான்:

“நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு சிறிய சந்தேகம் சார்.”

“எந்தச் சந்தேகமானாலும் நான் சொல்ல வேண்டிய தைச் சொல்லி முடித்தபின் கேட்கலாம்.”

“அப்படி இல்லை சார்! இந்தச் சந்தேகம் மிகமிக அவசரமானது. உடனே தீர்க்கப்பட வேண்டியது.”

“அப்படியானால் நீ உன் சந்தேகத்தைக் கேட்கலாம்.” “இந்த அவசரக் கூட்டம் மாணவர் பிரதிநிதிகளுக்கும் பல்கலைக் கழக நிர்வாகிகளுக்கும் இடையில்தானே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உங்கள் அறிக்கைக் கூறியது?” -

“ஆமாம் அதில் சந்தேகமென்ன?”

“சந்தேகமில்லையானால் மாணவர்களிலும் சேராமல் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பிலும் சேராமல் அந்நியராக இங்கே யார் இருந்தாலும் அவரை உடனே வெளியேற்றி விட்டு அப்புறம் நீங்கள் கூட்டத்தைத் தொடங்கலாம். அதுவரை இந்தக் கூட்டத்தை நாங்கள் தொடங்க விடமாட்டோம்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/54&oldid=608834" இலிருந்து மீள்விக்கப்பட்டது