பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பதற்கும் நிர்ப்பயமான மனநிலை வேண்டும். அடிமை நாட்டில் கலைவளர்ச்சி இல்லாமற் போவதற்கு இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் நிர்ப்பயமான கலை இலக்கிய வளர்ச்சி பெருக வேண்டும். எழுத்தாளனின் மனவுணர்வுகள் சுற்றுப் புறத்து அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளால் பாதிக்கப்பட வேண்டும். காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அப்போதுதான் உருவாகும். அப்படி உருவான ஒரு துணிவான-தீவிரமான சமகாலத்து நிலைமைகளால் பாதிக்கப்பட்ட- சமூக நாவல்தான் 'சத்திய வெள்ளம்’, 1972 ஜூலை முதல் 1973 ஏப்ரல் வரை கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது. இந்த நாவலை, தொடர்கதையாக வேண்டி வெளியிட்ட கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்களுக்கும், இப்போது நூலாக வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத் தாருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நாவலின் வாசகர்கள் வேறெந்தப் பொழுதுபோக்கு நவீனத்தாலும் அடைய இயலாத புதுவிதமான உணர்வு களையும், அனுபவங்களையும் சிந்தனைக் கிளர்ச்சிகளையும் இதன் மூலம் நிச்சயமாக அடைய முடியும் என்ற நம்பிக்கையோடும் இம்முன்னுரையை முடிக்கின்றேன்.

வணக்கம்.

தீபம்

அன்புடன்,

சென்னை-2

நா. பார்த்தசாரதி

30.7.1973

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/6&oldid=982816" இலிருந்து மீள்விக்கப்பட்டது