பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சத்திய வெள்ளம்

அவர்கள் பேசியபடி போய்க் கொண்டிருந்தார்கள். ஒரிடத் தில் தொடர்பாக இரண்டு மூன்ற மின் விளக்குக் கம்பங் களில் பல்புகள் இல்லாததாலோ என்னவோ விளக்குகள் எரியவில்லை. இரு சிறகிலும் மரங்கள் அடர்ந்த அப்பகுதி மிகவும் இரு ண்டிருந்தது. தாங்கள் துணை வேந்தர் மாளிகைக்குப் புறப்பட்டு வரும்போது அப்பகுதி அவ்வாறு இருண்டிருக்கவில்லை என்பதும் இந்த ஒரு மணி நேரத்துக்குள்தான் யாரோ அங்கே பல்புகளை உடைத்தி ருக்க வேண்டும் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.

நல்ல வேளையாகப் பேராசிரியரிடம் டார்ச்’ இருந் தது. ‘டார்ச் ஒளியில் அவர்கள் இணைந்து நடந்து சென்ற போது முதல் மின்விளக்குக் கம்பத்தைக் கடப்பதற் குள்ளேயே பக்கவாட்டிலிருந்து சரமாரியாகக் கற்கள் மேலே வந்து விழுந்தன. பாண்டியனையும் மோகன்தாஸை யும் பெயரைச் சொல்லித் திட்டும் வசைக் குரல்களும் இருளிலிருந்து ஒலித்தன. கல்லெறி நிற்காமல் தொடரவே இவர்களும் கூப்பாடு போட்டு கத்தியபடி கைக்குக் கிடைத் தவற்றை எடுத்துக் கல்லெறி வந்த திசை நோக்கிப் பதிலுக்கு வீசத் தொடங்கினார்கள். பாண்டியன் பேராசிரியர் கையிலிருந்த டார்ச்சை வாங்கிக் கொண்டு பத்துப் பதினைந்து சக மாணவர்களோடு காலிகள் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண் டு பிடிப்பதற்காக இரு எளி ல் பாய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் ஓடிவிட்டார் கள். டார்ச் ஒளியில் அன்பரசனையும் கோட்டச் செயலாளரையும் நன்றாக அடையாளம் தெரிந்த வேறு சில மாணவர்களையும் அவர்கள் விழுந்தடித்துக்கொண்டு ஒடும் நிலையிலும் பாண்டியனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

“அந்த ஆளைத் துணைவேந்தர் மாளிகையிலிருந்து நீங்கள் வெளியேற்றிய போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்தேன்” என்றார் பேராசிரியர், விடுதிகளுக்கு விரைந்து ஆயிரக் கணக்கில் மாணவர்களை எழுப்பி வந்து அந்தக் காலிகளைத் துரத்திப் பிடித்து மரங்களிலே கட்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/60&oldid=608820" இலிருந்து மீள்விக்கப்பட்டது