பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சத்திய வெள்ளம்

டும் என்ற ஆசையில் ஒரியண்டேஷன் டே, ஃப்ரீக்ஸ் டே (Freaks Day) போன்றவற்றையெல்லாம் இங்கே ஒரு வழக்கமாக ஏற்படுத்தினார். இவர் என்னடா என்றால் அந்த நல்ல பழக்கங்களை வைத்தே மாணவர்களின் உரிமைகளை ஒடுக்கப் பார்க்கிறார்.” என்று கோபமாகச் சொன்னார் ஓரளவு வயது மூத்த ஒரு எம்.ஏ. மாணவர். “செய்கிற காரியங்களைப் பார்த்தால் இவருக்குத் தாயுமானவனார் என்ற அன்பு மயமான ப்ெர் சற்றுக் கூடப் பொருத்தமாயில்லை!” என்பதாக ஆத்திரத்தோடு கத்தினான் மற்றொரு மாணவன். நேராக ஆக மாணவர் கூட்டம் அதிகமாகியது. ஒன்பதரை மணிக்கு அண்ணாச்சி அவனை வந்து பார்த்து ஆறுதல் கூறினார். காலை பத்து மணிக்கு மாணவர்கள் பெருங் கூட்டமாக ரிஜிஸ்திரார் அலுவலக முகப்பில் கூடிவிட்டார்கள். பாண்டியனும் மோகன்தாஸும், கண்ணுக்கினியாளும், இன்னும் இரண் டொரு மாணவிகளும் கூட்டத்தின் முன்னணியில் நோட்டீஸ் போர்டு அருகே நின்று கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு நடந்த கல்லெறிக்குப்பின் அன்பர சனையோ, வெற்றிச் செல்வனையோ எங்குமே காண வில்லை. அவர்கள் வகை மாணவர்களிலும் சிலரைக் காணவில்லை. தேர்தல்கள் தள்ளிப் போடப்படுவது பற்றி அவர்கள் தரப்பைச் சேர்ந்த மாணவர்களில் யாருமே கவலையோ, வருத்தமோ அடைந்ததாகத் தெரியவில்லை. தேர்தல்கள் நடக்காமல் நிறுத்தப்படுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சிகூட இருக்கும்போல் தெரிந்தது.

பத்தே கால்மணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் பியூன் பல்கலைக் கழக முத்திரையோடு கூடிய நீளமான தாளில் டைப் செய்யப்பட்டிருந்த அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்து பலகையில் ஒட்டினான். அறிக்கையின் கீழே ரிஜிஸ்திரார் கையெழுத்து இருந்தது.

முதல்நாள் இரவு இருவேறு தரப்பைச் சேர்ந்த மாணவர் குழுக்களிடையே நடந்த ஒரு மோதலை ஒட்டிப் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல்கள் கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/66&oldid=608808" இலிருந்து மீள்விக்கப்பட்டது