பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 65

வரையறையின்றித் தள்ளிப் போடப்படுவதாகவும் - இன்னும் பதினைந்து நாட்களுக்குப் பல்கலைக் கழக எல் லைக்குள் பதிவாளரின் முன் அநுமதியின்றிக் கூட்டங் களோ, ஊர்வலங்களோ கூடாது என்ற உத்தரவை மேலும் இரண்டு வாரம் நீடிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது. கால்மணி நேரம் கழித்து ஒட்டப்பட்ட மற்றோர் அறிக் கையில் அன்று மாலையிலேயே நடைபெறும் ஒரியண் டேஷன் நாள் கூட்டத்தில் துணைவேந்தர் மாணவர் களுக்குச் சொற்பொழிவாற்றுவார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிக்கைகளைப் பார்த்ததும் மாணவர் களிடையே உணர்ச்சி பெருக்கெடுத்துப் பொங்கியது.

துணைவேந்தரே! மாணவர் உரிமைகளை ஒடுக்காதீர் என்று கரியால் சுவரில் பெரிதாக எழுதினான் ஒரு மான வன். அடுத்த கணம் அதே வாக்கியம் பல்லாயிரம் குரல் களாக மைதானத்தில் எதிரொலித்தது. மாணவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பாண்டியனுக்கும் மோகன்தாஸ்-க்கும் இருந்தது. . அங்கே நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டிருந்த அந்த மேஜைமேல் அப்படியே தாவி ஏறினான் பாண்டியன். கை களை உயர்த்தி மாணவத் தோழர்களிடம் அமைதியைக் கோரினான் அவன். நெற்றியில் காயத்தோடு மேலே நின்ற பாண்டியனைக் கண்டதும் மைதானத்தில் கூடியிருந்த மாணவர்களின் பெருங்கூட்டம் மெல்ல மெல்லக் கட்டுப் பட்டு அமைதியடைந்தது. மேலே பேசத் தொடங்கினான்: “மாணவ நண்பர்களே, தோழியர்களே! இப்போது இங்கே ஒட்டப்பட்டிருக்கும் துணைவேந்தரின் அறிக்கை நம்முடைய நியாயமான உரிமைகளை ஒடுக்குகிறது. நேற்றிரவு நம் துணைவேந்தர் பேரவைத் தேர்தல் பற்றிப் பேசுவதற்காக எங்களைக் கூப்பிட்டனுப்பியதும், அவ ரோடு பேசிவிட்டு விடுதிகளுக்குத் திரும்பிக் கொண்டி ருக்கும்போது நாங்கள் காலிகளால் கல்லெறிபட்டதும் பற்றி நம் நண்பர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். இன்று அந்தக் கல்லெறியையே காரணமாகச் சொல்லி நம்

ச.வெ.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/67&oldid=608806" இலிருந்து மீள்விக்கப்பட்டது