பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சத்திய வெள்ளம்

ருக்காரு. வி.சி., யூனிவர்ஸிடி எல்லைக்குள்ளாற போலீலை நான் கூப்பிடவே இல்லையே? எப்பிடி வந்தாங்க அவங்கன்னு நாடகம் ஆடினாராம். கடைசிலே, சரி! பையங்க ரெண்டு பேரையும் விடச் சொல்லிடறேன். சாயங்காலம் ‘ஒரியண்டேஷன் லெக்சருக்கு எல்லாப் பையன்களும் அமைதியா மைதானத்திலே கூடுகிறதா உறுதியளிக்க முடியுமா?ன்னு கேட்டாராம். உடனே பையங்க எல்லாருமாச் சேர்ந்து, அது முடியாது! நிபந்தனை இல்லாமயே நீங்க அவங்க ரெண்டு பேரையும் விடச் சொல்லணும்னு வற்புறுத்தியிருக்காங்க. வி.சி. உடனே இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் ஃபோன் பேசினா ராம். விசாரிச்சு முடிஞ்சதும் மூணு மூனுரை மணிக்குள் உங்க ரெண்டு பேரையும் அனுப்பிடு வாங்கன்னு வி.சி. மாணவர்களுக்கு உறுதி கூறியிருக்கிறாராம்.”

“வி.சி. ஃபோன் பண்ணி அதற்கப்புறம் வந்ததாகத் தானே அந்த இன்ஸ்பெக்டரே எங்களிடம் சொன்னார். அப்படியிருக்கும்போது போலீஸ் வந்தது தமக்குத் தெரியா தென்று அவரே ஏன் சொல்ல வேண்டும் அண்ணாச்சி?” “ஏதோ அவர் இதுவரை பொய்யே சொல்லாதவர் போலவும் இப்போதுதான் முதல் முதலாகப் பொய் சொல்லிவிட்டது போலவும் ஆச்சரியப்படுகிறாயே, பாண்டியன் எப்போது அவர் நிஜத்தைச் சொல்லி யிருக்கிறார்?” என்றான் மோகன்தாஸ். சிறிது நேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபின் அண்ணாச்சி புறப்பட்டுப் போனார். போகும்போது மறுநாள் மாலை மணவாளனுக்குப் பிரிவுபசார விருந்து இருப்பதை அவரும் ஞாபகப்படுத்திவிட்டுப் போனார். மணவாளன் மதுரையிலிருந்து எப்போது வரக்கூடும் என்பதைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?” என்று பாண்டியன் அண் ணாச்சியிடம் வினவியபோது, “அநேகமா இன்னிக்கு ராத்திரி கடைசி பஸ் அல்லது நாளைக்குக் காலையிலே முதல் பஸ்ஸிலே வந்திடுவாரு” என்று அண்ணாச்சி புறப் படுமுன் அவர்களிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/74&oldid=608791" இலிருந்து மீள்விக்கப்பட்டது