பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 73

ஒருவேளை இன்ஸ்பெக்டர் விசாரணைக்குப் பின் தங்களை விடுதலை செய்துவிட்டாலும் துணைவேந்தரின் ‘ஒரியண்டேஷன் சொற்பொழிவைப் புறக்கணிப்பது என்ற முடிவை எக்காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தார்கள் அவர்கள். துணை வேந்தர் இந்தத் தேர்தலையும் இதில் தொடர்புடைய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மை யினரையும் ஒடுக்க முயலமுயல இது மகத்தான வெற்றி களை அடைந்தே தீரும் என்று அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

பகல் இரண்டரை மணிக்கு இன்ஸ்பெக்டர் திரும்பி வந்தார். மோகன்தாஸையும், பாண்டியனையும் விசா ரணை என்ற பேரில் ஏதோ கேள்விகள் கேட்டார். அவை அனைத்துமே ஏதோ ஒப்புக்குக் கேட்கப் பட்டவைபோல் இருந்தனவே தவிர தீவிரமாக இல்லை. அரை மணி நேரத்துக்குப் பின், “நீங்கள் இருவரும் போகலாம். படிப்புத் தான் முக்கியம். கலகத்தினால் படிப்பு வராது. யூனிவர் லிடியும், அதை ஒட்டிய இந்த நகரமும் லா அண்ட் ஆர்டரோடு - பீஸ்ஃபுல்லா இருக்க ஒத்துழையுங்க” என்று சிரித்துக் கொண்டே கூறியபடி இருவரோடு கை குலுக்கி விடை கொடுத்தார் இன்ஸ்பெக்டர். கைது செய்ய வந்த போது இருந்த வேகமும் மிடுக்கும் இப்போது அவரிடம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். புறப்படுமுன் மோகன்தாஸ் அவரைக் கொஞ்சம் வம்புக்கு இழுத்தான்:

“சார்! நீங்கள் இன்று காலையில் பல்கலைக் கழகத்துக்குள் எங்களைக் கைது செய்ய வந்தபோது எங்கள் வி.சி. ஃபோன் செய்ததின் பேரில் வந்ததாகக் கூறினர்கள். கேன் ஐ n தி எஃப். ஐ. ஆர்?”

“நீங்கள் ஒன்றையும் பார்க்க வேண்டாம். போய் நல்ல பிள்ளைகளாக லட்சணமாகப் படியுங்கள்” என்று அவர் மழுப்பிவிட்டார். அவர்களும் சிரித்துக்கொண்டே வெளி யேறினார்கள். மழை பெய்து முடிந்தபின் சாலைகள் கழுவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/75&oldid=608789" இலிருந்து மீள்விக்கப்பட்டது