பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சத்திய வெள்ளம்

விட்டதுபோல் பளிச்சென்றிருந்தன. மழை பெய்து முடிந்த பின்புதான் சில நகரங்களில் சாலைகள் சேறும் சகதியுமாய் அசிங்கமாகிவிடும். ஆனால் மல்லிகைப் பந்தல் நகரில் மேடும் பள்ளமுமான மலைச் சாலைகளாகையால் எவ் வளவு மழை கொட்டினாலும் மழை நின்ற அடுத்த கணமே சாலைகள் பளிச்சென்றிருக்கும். போலீஸ் ஸ்டேஷன் வாசலிலிருந்து கால்மணி நேரம் நடந்து கடை வீதிக்கும், பல்கலைக் கழகத்திற்கும் சாலைகள் பிரியும் இடத்தை அடைந்தபோதுதான் இன்ஸ்பெக்டர் ஏன் அவ் வளவு அவசரப்பட்டுத் தங்கள் இருவரையும் வெளியே அனுப்பிவைத்தார் என்பது பாண்டியனுக்கும், மோகன் தாஸ்-க்கும் புரிந்தது.

பல்கலைக் கழகச்சாலையிலிருந்து மாணவர் தலைவர் களை விடுதலை செய், அடக்குமுறை ஒழிக, துணை வேந் தரே! தீமைக்குத் துணை போகாதீர் போன்ற கோஷங் களுடனும், அதே வாக்கியங்கள் எழுதிய அட்டைகளுட னும் ஆயிரக் கணக்கான மாணவர்கள் போ லீ ஸ் ஸ்டேஷனை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். இருபுறமும் மரங்கள் அடர்ந்த நேரான அந்தச் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதுபோல் மாணவர்கள் வருவது கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.

ஊர்வலத்தின் முதல் வரிசையில் மாணவிகளின் அணி இருந்தது. அந்த அணிக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த கண்ணுக்கினியாளின் வலது கரத்தில் மாணவர் களை விடுதலை செய்யக் கோரும் வாசகம் அடங்கிய அட்டை ஒன்றிருந்தது. தொடர்ந்து அலை அலையாக மாணவிகளும், மாணவர்களும் பின்னால் வந்து கொண்டி ருந்தார்கள். பாண்டியனையும், மோகன்தாஸையும் எதிரே பார்த்ததும் ஊர்வலத்தின் உற்சாகம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒடிவந்து சூழ்ந்து கொண்ட மாணவர்கள் அவர்கள் இருவரையும் அப்படியே கட்டித் துாக்கிவிட்டார்கள். புறப்பட்ட ஊர்வலம் நோக்கமின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/76&oldid=608787" இலிருந்து மீள்விக்கப்பட்டது