பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சத்திய வெள்ளம்

மிகவும் அந்நியமானவர்கள் சொல்லிக் கொள்வதுபோல் இப்படி நன்றி கூடவா சொல்லிக் கணக்குத் தீர்த்துவிட வேண்டும்?”

“உங்களைப்போல் ஜூனியராக, இந்த ஆண்டுதான் இங்கு வந்து சேர்ந்திருக்கும் ஒரு புதிய மாணவி, கூச்சமும், பயமும் இல்லாமல் இதை எல்லாம் சாதித்து முடித்தி ருப்பது பெரிய காரியம்தான்” என்று மோகன்தாஸ்-சம் அவளைப் புகழ்ந்தான்.

“நீங்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி என்னைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் நான் உங் களோடு அண்ணாச்சிக் கடைக்கு வருவதைத் தவிர்த்து விட்டு விடுதிக்கே திரும்ப வேண்டியிருக்கும்.”

“நான் வேண்டுமானால் புகழ்வதை நிறுத்திவிடு கிறேன். ஆனால் பாண்டியனின் உரிமைகளை நான் கட்டுப்படுத்த முடியாது. அவன் பாடு, உங்கள்பாடு. ரொம்பவும் அந்நியோந்தியமானவர்களின் உரிமைகளில் மூன்றாம் மனிதர்கள் தலையிட முடியாது” என்று மோகன் தாஸ் குறும்பு தொனிக்கக் கூறியதும், “இந்த வம்புதானே வேண்டாம்னேன்” என்று பாண்டியன் அவசர அவசரமாகக் குறுக்கிட்டான். மோகன்தாஸைப் பேச விடாமல் முந்திக் கொண்டு தடுத்த அந்த அவசரத்திலும், அவள் விழிகளில் தெரிந்த ஆவலையும், கன்னங்கள் சிவந்து இதழ்களில் அரும்பும் இள நகையையும் பாண்டியன் காணத் தவற வில்லை. அந்த விநாடியில் அவள் தன்னருகே தோளோடு தோள் நடந்து வருகிறாள் என்பதே அவனுடைய அந்தரங்கத்தின் பெருமிதமாக இருந்தது. இன்பகரமான தோர் இறுமாப்பாகவும் இருந்தது.

அவர்கள் அண்ணாச்சிக் கடைக்குப் போய்ச் சேரும் போது மாலை ஆறு மணியாகிவிட்டது. மல்லிகைப் பந்தலின் அழகிய சாலைகளில் விளக்குகள் மின்னத் தொடங்கிவிட்டன. மேடுகளிலும், உயரமாயிருந்த மலைப் பகுதிகளிலும் அங்கங்கே தெரிந்த விளக்கு ஒளிகள் அந்த மாலை நீலத்தின் சுகமான இருட் கனத்தினிடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/80&oldid=608776" இலிருந்து மீள்விக்கப்பட்டது