பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி Bj

கண்ணுக்கினியாள் விடுதிக்குத் திரும்பும் நேரம் ஆகிவிட்டது என்று கைக்கடிகாரத்தைப் பார்க்கவே அவளை மட்டும் தனியே அனுப்பக்கூடாதென்று அவர் கள் எல்லாருமே அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குப் புறப்பட்டார்கள்.

“போற வழியிலே இன்னிக்கும் ஏதாவது ‘கல் தோன் றாமே, மண் தோன்றாமே பார்த்துப் பத்திரமாய்ப் போய்ச் சேருங்க, தம்பிகளா..!” என்று எச்சரிக்கையோடு விடை கொடுத்தார் அண்ணாச்சி. “இன்றைக்கு இராத்திரியோ, காலையிலோ மணவாளன் மதுரையிலிருந்து வந்ததும் எனக்கு ஒரு வார்த்தை சொல்லியனுப்புங்க அண்ணாச்சி.” என்று போகும்போது ஞாபகப்படுத்திவிட்டுப் போனான் பாண்டியன்.

மணவாளன் என்ற மாபெரும் சக்தியினால் கவரப் பட்டுத்தான் பாண்டியன் போன்றவர்களுக்கு அந்தப் பல்கலைக் கழக மாணவர் இயக்கத்திலேயே அக்கறை ஏற்பட்டது. பாண்டியன் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வந்த முதல் நாளிலேயே அண்ணாச்சி மணவாளனை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மாணவர்களை விடலைகளாகவும், விட்டேற்றிகளாகவும், சினிமா லோலர் களாகவும், எதுகை, மோனைப் பித்தர்களாகவும் ஆக்கி ஆண்டு வந்த ஒரு முரட்டுப் பிடியிலிருந்து விடுவித்துத் தேசிய நோக்கமுள்ள மாணவர் இயக்கம் ஒன்றை அங்கே உருவாக்கிய பெருமையே மணவாளனின் பெருமைதான். மணவாளன் அஞ்சாநெஞ்சன். தன் வழியில் அவன் பாண்டியனைத் தயார் செய்து ஆளாக்கிவிட்டுப் போயிருந்தான். அந்த நன்றி விசுவாசமும் அன்பும்தான் பாண்டியனை மணவாளனின் வரவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்திருந்தன. r

மறுநாள் காலை பாண்டியன் என்.சி.சி.க்குப் போய் விட்டு மைதானத்திலிருந்து திரும்பி வந்ததும் அண்ணாச்சி கடையிலிருந்து ஒரு பையன் வந்து மணவாளன் வந்து சேர்ந்த தகவலைத் தெரிவித்துவிட்டுச் சென்றான். குளித்து

ச.வெ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/83&oldid=608770" இலிருந்து மீள்விக்கப்பட்டது