பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சத்திய வெள்ளம்

உடை மாற்றிக்கொண்டு வேறுசில மாணவர்களையும் உடனழைத்துக் கொண்டபின் பாண்டியன் மணவாள னைப் பார்க்கச் சென்றான். மணவாளன் மாணவ சகோதரர்களை உற்சாகமாக வரவேற்றார்.

“அண்ணாச்சியிடம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் பாண்டியன்! நீங்கள் ஒற்றுமை குலையாம லிருக்கும்வரை உங்கள் இயக்கத்தை யாரும் அடக்கிவிட முடியாது. இந்தப் பல்கலைக் கழகத்தில் அரும்பாடுபட்டு நான் ஏற்றிய ஒரு விளக்கை அவிந்துவிடாமல் காக்கும் பொறுப்பு இன்று உங்கள் அணியினரிடம் விடப் பட்டி ருக்கிறது. இதை அப்படியே காத்து அடுத்த அணியினரி டம் தர நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்றார் அவர். அன்று பிற்பகல்வரை மாணவர்கள் மணவாளனுட னேயே இருந்தார்கள். அவரோடு அவர் சென்ற இடங் களுக்கு உடன் சென்றார்கள். சேர்ந்து உணவருந்தினார்கள். உரையாடி மகிழ்ந்தார்கள். ஆலோசனைகள் கேட்டார்கள். “சமூகப் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கி, ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பணியை இனி மாணவ சமூகம் தான் தொடங்கி நிறைவேற்ற முடியும்” என்பதை மணவாளன் உறுதியான நம்பிக்கையோடு அவர்களுக்குச் சொன்னார். “உலகின் மற்ற நாடுகளிலுள்ள ஏழைமைக்கும் நம் நாட்டு ஏழைமைக்கும் வித்தியாசம் உண்டு. அவ்வளவு ஏன்? ஆசியாவில் பின்தங்கிய நாடுகளின் ஏழைமை புது விதமானது. பணத்தினாலும் ஏழைகள், கல்வியின்மை யினாலும் ஏழைகள், பரிந்துணர்வினாலும் ஏழைகள், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு இன்மையினாலும் ஏழைகள் என்ற பலவிதமான ஏழைகள் இங்கு இருக் கிறார்கள்” என்பதுபோல் பல கருத்துக்களை இளைஞர் களின் சிந்தனையைத் துரண்டும் விதத்தில் மணவாளன் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.

அன்று மாலையில் லேக்வியூ ஹோட்டல் புல்வெளி யில் நடைபெறவிருந்த விருந்துக்குப் பாண்டியனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/84&oldid=608767" இலிருந்து மீள்விக்கப்பட்டது