பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சத்திய வெள்ளம்

மலர்ந்தது. தென்மணி லாரி செர்வீஸ்’ என்ற அந்த லாரியின் பெயரையும் அண்ணாச்சி இரண்டாவது தடவையாகக் கேட்டுக் கொண்டார். அதன்பின்பு, “தம்பீ! வாங்க. இனிமேல் எங்கே தேடணும்னு தெரிஞ்சு போச்சு” என்று பொன்னையாவிடம் கூறிவிட்டு, அவனையும் அழைத்துக்கொண்டு லேக்வியூ ஹோட்டலுக்குத் திரும்பினார் அண்ணாச்சி. மணவாளனின் அறைக்குப் போய்ச் சேர்ந்ததும் அண்ணாச்சியும், பொன்னையாவும் வேறு ஒரு புதிய செய்தியை அங்கே அறிய நேரிட்டது. மணவாளனோடு அங்கே அறையில் இருந்த மோகன்தாஸ் அந்தப் புதிய செய்தியை இவர்களுக்குச் சொன்னான்.

“அண்ணாச்சி! காலையில் நானும் நண்பர்களும் பாண்டியன் காணாமல் போனதைப் பற்றிப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துவிட்டு எங்களுடைய பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் பூதலிங்கத்திடமும்போய் இதைத் தெரிவித்தோம். நாங்கள் அவரிடம் பேசிவிட்டு இங்கே வரும்போது பதினொன் றரை மணி வந்து ஒர் அரை மணி நேரத்துக் கெல்லாம் மறுபடியும் பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எங்களை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார் பேராசிரியர். நானும் நண்பர்களும் உடனே போய் அவரைச் சந்தித்தோம். இங்கேயே உள்ளூரில் தபாலில் போடப்பட்ட பாண்டி யனின் கையெழுத்தோடு கூடிய இன்றைய தேதியிட்ட ஒரு கடிதத்தை அவர் எங்களிடம் காட்டினார். அதில் இடம், விலாசம், ஒன்றுமில்லை. மாணவர் பேரவைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதிலிருந்து சொந்தக் காரணங் களால் தான் விலகிக்கொள்வதாக எழுதிக் கையெழுத் திட்டிருந்தான் பாண்டியன். யாரோ நிர்ப்பந்தித்துப் பலாத் காரமாக எழுதி வாங்கி அனுப்பிய கடிதம் போலிருந்தது அது. நாங்கள் சந்தேகப்பட்டது போலவே பேராசிரியரும் அந்தக் கடிதத்தைப் பற்றிச் சந்தேகப்படுகிறார். எதிரிகளின் அத்தனை மிரட்டலுக்கு நடுவிலும் தந்திரமாக ஒரு காரியம் செய்திருக்கிறான் பாண்டியன். அபேட்சை மனு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/96&oldid=608741" இலிருந்து மீள்விக்கப்பட்டது