பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 97

மாணவர்களும் அந்த லாரியில் மலைப்பகுதிக்குப் புறப் பட்டார்கள். நகர எல்லை கடந்ததும் லாரி டிரைவர் “எங்கே போகவேண்டும்? என்று கேட்டான்.

“ப்ளுஹறில் கார்டமம் எஸ்டேட்டுக்குப் போ! மெயின் ரோடிலிருந்து எஸ்டேட்டுக்குப் பிரிகிற மலை வழிக்குப் பக்கமாகப் போனதும் மறுபடியும் என்னைக் கேள்” என்று வழி சொன்னார் அண்ணாச்சி.

நகர எல்லைக்குப் போய்ச் சேருவதற்குள்ளேயே நன்றாக இருட்டிவிட்டது. இப்போதோ இன்னும் சில விநாடிகளிலோ மழை வந்துவிடும்போல் மேகங்கள் வானை மூடிக் கருமை குவித்திருந்தன. சாலையின் இரு புறமும் அடர்ந்த காட்டின் பசுமையும் ஈர மணமும் சுகமாயிருந்தன. சிறிது தொலைவு போவதற்குள்ளேயே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. லாரியின் டிரைவர் nட் அருகே அமர்ந்திருந்த இருவரைத் தவிர மற்ற மாணவர்கள் நனைய நேரிட்டது. நடுவே சாலையில் ஒரிடத்தில் இவர்கள் போய்க்கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையிலிருந்து தென்மணி லாரி செர்வீஸ் - லாரி ஒன்று விரைந்து வந்தது. மேலே ஏறும் வண்டிகளுக்கு முதலில் வழி விலகி இடம் விடவேண்டும் என்ற முறையை யும் மீறி, நிற்காமல் விரைந்து இறங்கிச் சென்றது அந்தத் தென்மணி லாரி. அதில் யார் இருக்கிறார்கள் என்பதை அந்த மழையில் அண்ணாச்சியினால் கவனிக்க முடிய வில்லை. மேலும் பதினைந்து நிமிஷங்களுக்குப்பின், “எஸ்டேட்டுக்குப் பிரிகிற வழி வந்தாச்சுங்க. இங்கேயே நிறுத்திக்கிடட்டுமா?” என்றான் லாரி டிரைவர். அண்ணாச்சி, லாரியை அங்கேயே நிறுத்தச் சொல்லி விட்டுத் தான் மட்டும் ஒரு கிளுவைக் கம்பு, டார்ச்லைட் சகிதம் கீழே இறங்கினார். -

“தம்பிங்களா! முதல்லேயே எல்லாரும் திமுதிமுன்னு உள்ளே நுழைய வேணாம். நான் போய் நோட்டம் பார்க்கிறேன். இங்கே இந்த எஸ்டேட்லே நம்ப வகைப் பையன் ஒருத்தன் வாட்ச்மேனாக இருக்கான். அவனைக்

ச.வெ-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/99&oldid=608735" இலிருந்து மீள்விக்கப்பட்டது