பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சத்தியாக்ரகம் வாளை உபயோகிக்கும் சக்தியில் பெருமை பேசிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. வாளை உபயோகிக்கிறவன் தான் செய்தது கொலையாகு மென்றும், அது பாபமான கார்யமென்றும் உணர்ந்து கன் அறிவின்மைக்காகப் பச்சாதாபப்படுவான். ஆனல் பிறர்க்குத் திங்கிழைக்காமல் தான் சாகத் துணிந்தவன் செய்தது பிழையானுலும் அவ னுக்கு அது வெற்றியேயாகும். சத்யாக்ரக மென்பது அஹிம்சா மதம். ஆகையால் அது எங்கும், எப்பொழு தும் கடமையும் விரும்பத்தக்கதுமாகும். பலாத்காரம் என்பது ஹிம்சை. அது எல்லா மதங்களிலும் விலக்கப் பட்டிருக்கின்றது. ஹிம்சை முறையை அதுஷ்டிக்கிறவர் களுங்கூட அதை உபயோகிப்பதற்கு அனேக கிபந்தனே கள் ஏற்படுத்தி யிருக்கின்றனர். சத்யாக்ரகத்திற்கு அவ் விக நிபந்தனைகள் ஏற்படுத்த முடியாது. துன்பத்தைச் சகித்துக் கொள்வதற்கு சக்யாக்ாகிக்குள்ள சக்தி போதாமை யொன்றே அதற்குள்ள கிபக்தனேயாகும். சக்தியாக்ரகி யொருவனுடைய சத்யாக்ரகம் சரி யானதா, அல்லவா என்ற கேள்விக்கு அவனைத் தவிர வேறெவரும் பதிலுரைக்க முடியாது. சத்யாக்ாகி தன் வேலையை ஆரம்பித்த பின்னரே, பொது ஜனங்கள் தங்கள் அபிப்பிராயத்தை உரைக்க இயலும். பொது ஜனங்களு டைய வெறுப்பு அவனத் தடுக்க முடியாது. துட்பமாக முன் கூட்டி யோசித்து அவன் கார்யத்தைத் தொடங்குவ தில்லை. வெற்றி தோல்விகளைப் பற்றி முன்கூட்டி யோசித் துப் பின் சத்யாக்ரகத்தை ஆரம்பிப்பவனே சாமர்த்திய முள்ள ராஜதந்திரி அல்லது புத்திமான் என்று சொல்ல லாம்; ஆல்ை அப்படிப்பட்டவன் எவ்விதத்திலும் சத்யாக் ா கியாக மாட்டான். சத்யாக்ரகி ஜயமோ, கோல்வியோ, செய்யாமலிருக்க முடியாகென்ற காரணமொன்றின லேயே செப்கிருன்.