பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அஹிம்சா தர்மம் சொல்லி வருகிறேன். கிர்மானத் திட்டத்தை நிறைவேற். ருமலே சமயம் வரும்பொழுது அஹிம்சாப் போரில் இறங்கி விடலாம் என்று எண்ணுவோர் படுதோல்வியே அடைவர். அவர்கள் கொழுத்துப் பருத்து ஆயுதங் தரித்த போர் வீரனை எதிர்க்கும் படியான நிராயுக பாணியை யொப்பார்கள். கிர்மாணத் தி ட்ட த் தி ல் நம்பிக்கை யில்லாதவர்க்கு பட்டினியால் வாடும் கோடிக் கணக்கான ஏழை மக்களிடம் சகோதர உணர்ச்சி யிராது. அந்த உணர்ச்சி யில்லாதவன் அஹிம்சாப் போர் செய்ய முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக இந்த உணர்ச்சி வளர்ந்து வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக என்னுடைய அஹிம்சை வளர்ந்து வருகிறது. இன்னும் அந்த உணர்ச்சி என்னிடம் பரிபூரணமாக உண் டாகாக கால் அஹிம்சையும் என்னிடம் இன்னும் பரிபூரண மாக உண்டாக வில்லை. 23. இந்தியாவானது அஹிம்சா முறையில் உண்மையான ஜனநாயகத்தை அமைக்க முயன்று கொண்டிருக்கிறது. நம்முடைய ஆயுதங்கள் ராட்டினம்,கிராமக் கைத்தொழில் கள், திண்டாமை விலக்கு, மதுவிலக்கு போன்ற சக்யாக் கிரக விஷயங்களேயாகும். இவையெல்லாம் பொதுஜன முயற்சியும், பொது ஜனக் கல்வியுமாகும். இந்த முயற்சியி லிருந்தே வரிகொடாமை உட்பட சகல சத்தியாக்கிரக இயக்கங்களையும் ஆரம்பிக்கக் கூடிய சக்தி உண்டாகும். 24 சக்யாக்ரகத்தில் பலாக்காரத்துக்கும் துவேஷத்துக்கும் கொஞ்சம் கூட இடம் கிடையாது. ஆதலால் நான் ஆங்கி லேயரிடம் துவேஷம் கொள்ளவும் முடியாது. துவேஷம் கொள்ளவு மாட்டேன். அதுபோலவே, நான் அவர்களு