பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஒத்துழையாமை சாங்கத்தை பலாத்காரம் கொண்டு எதிர்ப்பது அதில் சேராது. அதனால் ஒத்துழையாமையை சாதாரண அறி வுள்ள குழந்தைகளும் பொது ஜனங்களும் யாதொரு திங்குமின்றி அனுஷ்டிக்க முடியும். ஆல்ை சாத்வீகச் சட்டமறுப்பு செய்ய வேண்டுமானுல் அதற்கு எப்பொழு துமே சட்டங்களை தண்டனே கிடைக்கும் என்ற பயம் காரணமாக வன்றி தாமாகவே மனமுவந்து அனுசரித்து நடக்கும் பழக்கம் கைவந்திருக்க வேண்டியது அவசியம். ஆதலால் சாத்வீகப் போரில் கடைசியாகவும் ஆரம்பத்தில் அக்க்கைய பழக்கமுடைய சிலராலுமே கையாளப்பட வேண்டிய ஆயுதமாகும். 9 ஒத்துழையாமை என்பது இந்தியர்களுடைய இரத்தத் திலேயே கலந்துள்ளது. அதேைலயே நான் ஒத்துழை யாமை என்றதும் கோடிக்கணக்கான, இந்திய மக்கள் இதோ என்று வந்து சேர்ந்திருக்கிருர்கள். ஒத்துழை யாமை அவர்களுடன் பிறந்தது. ஒவ்வொரு மதத்திலும் காணப்படுவது. ஹிந்து மதமும் இஸ்லாம் மகமும் கூறு வது. அதனுல் கான் அடிமைகளாய் அயர்ந்து கிடக்க போதிலும் அவர்களை ஒத்துழையாமையானது அவர்களு டைய நீண்ட நாள் உறக்கத்திலிருந்து எழுப்பி யிருக்கி றது. ஒத்துழையாமை நமக்கு நம்பிக்கையும், பலமும், தைரியமும் அளித்திருக்கின்றது. _ - 10 ஒத்துழையாமையின் பிரதம் கோக்கம் தர்மநெறி தவறியும் கழிவிரக்கம் கொள்ளாமலும் நடந்து வரும் அர சாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை மறுப்பதன் மூலம் ம்ேமைத் தூய்மை செய்து கொள்வதாகும். இரண்டாவது நோக்கம் எல்லா விஷயங்களுக்கும் அரசாங்கத்தை எதிர் பார்த்து கிற்கும் சார்பு உணர்ச்சியை நீத்து நாமே நம்