பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

முருகுசுந்தரம்



தமிழே இறைவன்


'இசையோடு தமிழாய் இருப்பவன்' என்றும்
'தென்தமிழாய் வடமொழியாய் மறைகள் நான்காய்
திருவுருத் தாங்கிய பெருமான்’ என்றும்
அண்டர் பிரானுக் காட்பட்ட அப்பர்
பண்டா ரத்தமிழ் பாடிக் களிக்கிறார்’
பரவையார் காதலால் படுக்கைகொள் ளாமல்
இரவைப் பகலாக்கி இருந்த சுந்தரர்
'பண்ணிடைத் தமிழை ஒப்பாய் போற்றி!
பண்ணார் இன்றமிழ்ப் பரஞ்சுடர் போற்றி'!
என்று பாடி இறைவனைத் தூதாய்க்
கன்று மானுக் கன்று போக்கினார்.
சோழன் வெண்குடை கவிக்கத் தில்லையில்
வேழம் ஊர்ந்த வேளாளச் சேக்கிழார்
'ஞாலம் அளந்த தெய்வத் தமிழ்' என்றார்.


தமிழின் தெய்வத்தன்மை


மாண்புசேர் மன்றலில் மணந்த மனைவியை
ஆண்பால் என்றும் அலிப்பால் என்றும்
கோணல் இலக்கணம் கூறும் ஆரியம்
அற்புதம் நிகழ்த்தும் ஆண்டவன் மொழியாம்
சிற்பமும் கூத்தும் தேன்வரிப் பாட்டும்
பிறமொழிக் கில்லா அகம்புறப் பகுப்பும்
மரபோ டுவமையும் எழுத்தொடு சொல்லும்