பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

31




நெருப்பு வேள்விகள் நடத்திய ஆரியர்
விருப்புடன் தாங்கள் 'வணங்கிய இறைக்கு
மாட்டையும் ஆட்டையும் மாவையும் அவியாய்
ஊட்டினர் என்பதை அவர்மறை கூறும்.
இனிக்கும் தமிழையே தென்னாட் டிறைவன்
தனக்குண வாகக் கொண்டனன்; எனவே
'தமிழ்ப்பாட் டவியுணும் பரமன்' என்று
பாடிப் பரவினர்; அவ்விறை வற்குப்
பால்வாய்ப் பசுந்தமிழ் பகையாவ தெங்ஙனம்?
மொய்குழல் வள்ளி முருகன், தமிழால்
வைதவர் தமையும் வாழவைப் பானெனில்
அத்தமிழ் அருச்சனைக் காகாப் பொருளோ?


எட்டி நில் பகையே!


அடுக்கிய கோடி அரும்புகழ் பெறுந் தமிழ்;
வடுப்படாப் பசுந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ்
கோவிலின் உள்ளே கொலுக்கொள் ளாவிடில்
கோவிலைத் துறப்பினும் துறப்போம்! ஆனால்
குளிர்தமிழ் என்றும் துறப்போம் அல்லோம்!
'தமிழ்நிலை தாழத்' தமிழர்நாட் டுள்ள
உமியும் தவிடும் ஒருப்படா துணர்க!
மாதர்வாண் முகத்து மங்கை யிருக்க
ஏதில் பிணத்தைத் தழுவார் தமிழர்!
வங்க நாட்டிலோ, மராட்டிய நாட்டிலோ,
எங்கள் தமிழால் இறைவனை வணங்க
ஆணையிட் டோமா? ஆணை யிட்டது