பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

முருகுசுந்தரம்



முத் தமிழ் நாட்டில்! மூவேந்தர் எழுப்பிய
சித்திரம் சிலைகள் சிரிக்கும் கோவிலில்!
நாளும் அறங்கள் நாடிப் புரிந்த
வேளிர்கள் வேந்தர்கள் பெருநிலக் கிழார்கள்
பச்சை யப்பர்போல் பச்சைத் தமிழர்கள்
உச்ச வரம்புக் கஞ்சிய செல்வர்கள்
விட்ட நிவந்த வேலி நிலங்களின்
வருவாய் கொண்டிங்(கு) அறுகாலப் பூசை
நடக்கும் கோவிலில்! ஆனால் தமிழைக்
கோவிலில் எதிர்க்கும் குள்ளனே! நீயார்?
சேரனா? சோழனா? பாண்டியன் பேரனா?
கட்டிக் முடித்தபின் காசுக் காக
எட்டிப் பார்த்தே இறங்கிய பார்ப்பு!
வேலி நிலங்களின் விளைச்சலை உண்டு
தாழி வயிற்றை வளர்ப்பவன்; நீயா
தமிழுக்குத் தடைக்கல்? தடையாக நின்றால்
இமயக் குன்றமும் எங்களுக் கப்பளம்!
கடலும் சூழ்ச்சியும் காலமும் முயன்று
முடியாச் செயலை முயல்பவர்; இந்நாள்
எவரா யிருப்பினும் அவரை எதிர்த்து
நீட்டும் எட்டுக் கோடி கைகளும்
ஈட்டியாய் மாறும்! எட்டிநில் பகையே!