பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1939 மார்ச் திங்கள் 12ஆம் நாள் மாலை தமிழ்மறவன்
தாளமுத்து அடக்கம் செய்யப்பட்டபோது, தோழர்
சி.பாசுதேவ் தலைமையில் இடுகாட்டில் நடை
பெற்ற இரங்கற்கூட்டத்தில், இந்தி எதிர்ப்புப்
போர்த் தளபதி பேரறிஞர் அண்ணா ஆற்றிய
கண்ணீர்ப் பேச்சு.


பால் நிலவு உதிர்ந்தது!



இருதிங்கள் முன்பாக இந்திப் போரில்
இளங்குருத்து நடராசன் இறந்தான்; அந்தப்
பெருவீரன் செங்குருதி காய்வ தற்குள்
பின்னுமொரு களப்பலியா? தமிழர் கண்ணீர்த்
தெருவெள்ளக் கடல்மீது தாள முத்து
தெப்பவிழாக் காணுகின்றான்; சொந்தத் தம்பி
ஒருவனை நான் இழந்ததுபோல் உணரு கின்றேன்;
உண்மையில் நான் ஒருபாதி இறந்து விட்டேன்.


‘சாக்கோட்டை'[1] மாநாட்டில் வீர நாடார்
சமூகத்தைப் பாசறைக்குள் அழைத்துச் சொன்னேன்:
‘பூக்காடென் றெண்ணாதீர்! நீர் அனுப்பும்
போர்மறவர் மீள்வரென்ற உறுதி யில்லை!
தீக்காட்டில் நுழைகின்றோம்!" என்றேன்; அந்தத்
தீரவுரை கேட்டுவந்த தாள முத்து
சாக்காட்டைத் தழுவிவிட்டான்; எனது பேச்சைச்
சாகாத சரித்திரமாய் மாற்றி விட்டான்.


  1. சாக்கோட்டைச் சுயமரியாதை மாநாடு